வீழ்­வோ­மென எதிர்­பார்த்­தி­ருந்­த­வர்கள் தற்­போது வாய­டைத்­துப்­போ­யுள்­ளனர் - அகிலவிராஜ்

Published By: Daya

04 Oct, 2019 | 10:42 AM
image

( எம்.ஆர்.எம்.வஸீம், நா.தினுஷா)

வேட்­பாளர் தெரிவின் மூலம் ஐக்­கிய தேசியக் கட்சி பிள­வு­பட்டு அர­சாங்கம் வீழ்ச்­சி­ய­டையும் என எதிர்­பார்த்­தி­ருந்­த­வர்கள் தற்­போது வாய­டைத்­துப்­போ­யுள்­ளனர். அத்­துடன் ஜனா­தி­பதித் தேர்­த­லுடன் பொதுத்­தேர்­த­லையும் வெற்­றி­ கொள்ள ஒற்­று­மை­யாக செயற்­ப­ட­வேண்டும் என  அமைச்­சரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ள­ரு­மான அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் கட்சி சம்­மே­ளனம் மற்றும் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­விக்கும் விசேட கூட்டம் நேற்று சுக­த­தாச உள்­ளக அரங்கில் இடம்­பெற்­றது. இந்நிகழ்வில் கலந்து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,

1994ஆம் ஆண்­டுக்கு பின்னர் ஐக்­கிய தேசியக் கட்சி ஜனா­தி­பதி ஒரு­வரை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள எங்­க­ளுக்கு முடி­யாமல் போயுள்­ளது. அந்த குறை­யை­போக்­கவே இம்­முறை இளம் வேட்­பா­ள­ரான கட்­சியின் பிர­தித் ­த­லைவர் சஜித் பிரே­ம­தா­சவை வேட்­பா­ள­ராக நிய­மித்­தி­ருக்­கின்றோம். வேட்­பா­ளரை தெரி­வு­செய்­யும்­போது கட்­சிக்குள் பல்­வேறு கருத்து வேறு­பா­டுகள் இருந்­தன. இவை அனைத்­தையும் சமா­ளித்து கட்­சியை ஒற்­று­மைப்­ப­டுத்தும் தீர்­வொன்றை வழங்க தலைவர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுக்கு முடிந்­துள்­ளது.

அதி­காரப் போராட்­டங்கள் இடம்­பெ­றும்­போது பல கட்­சிகள் பிள­வு­பட்ட வர­லாறு இருக்­கின்­றது. ஆனால் ரணில் விக்­கிரம­சிங்­கவின் பாரிய அர்ப்­ப­ணிப்­பினால் அந்த நிலை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஏற்­ப­ட­வில்லை. கட்­சியின் ஒற்­று­மையே எமக்­கு­ரிய ஒரே பல­மாக இருக்­கின்­றது. அத்­துடன் எமது ஆத­ர­வா­ளர்­களும் என்ன நடக்கும் என்ற அச்­சத்­தி­லேயே இருந்­தனர். என்­றாலும் தற்­போது எமக்கு சிறந்த முடிவு கிடைத்­தி­ருக்­கின்­றது.

ஜனா­தி­பதி வேட்­பாளர் தெரிவில் கட்­சிக்குள் ஏற்­பட்­டி­ருந்த சல­ச­லப்பு கார­ண­மாக எமது கட்சி பிள­வு­படும் என்றும் இரண்டு வேட்­பா­ளர்கள் போட்­டி­யிடும் என்றும் எதி­ர்க்­கட்­சி­யினர் எதிர்­பார்த்­தி­ருந்­தனர். அதே­போன்று வேட்­பாளர் தெரிவில் கட்­சிக்குள் ஏற்­படும் பிளவு கார­ண­மாக அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளித்­து­வரும் பங்­காளிக் கட்­சிகள் பிரிந்­து­விடும் என்றும் அதன் மூலம் அர­சாங்கம் வீழ்ச்­சி­ய­டையும் என்றும் எதிர்க்­கட்­சி­யினர் எதிர்­பார்த்­தனர். என்­றாலும் தலைவர் ரணில் விக்கி­ர­ம­சிங்க இந்த சவால்கள் அனைத்­தையும் வெற்­றி­கொண்டு வழங்கிய தீர்வு கார­ண­மாக பொது­ஜன பெர­முன கட்சி வாய­டைத்­துப் ­போயுள்­ளது.

அதி­கா­ரத்­துக்கு வந்து நாங்கள் பல சவால்­க­ளுக்கு மத்­தியில் பாரிய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை செய்­தி­ருக்­கின்றோம். இன்னும் பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ள இருக்கின்றோம். எமது வேலைத்திட்டங்களை மேலும் அதிகரிக்க ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச்செய்வதுடன் அடுத்த பொதுத்தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27