கோத்தாபயவுக்கு எதிரான மனுமீதான பரிசீலனை இன்று மீண்டும் 

Published By: Vishnu

04 Oct, 2019 | 09:01 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும், முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோத்­தா­பய ராஜ­பக்­ஷவை இலங்கை பிர­ஜை­யாக ஏற்றுக் கொள்­வதை தடுத்து உத்­த­ர­வொன்றைப் பிறப்­பிக்­கு­மாறு கோரி,  மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்யப்பட்ட 'செட்­டி­யோ­ராரி' எழுத்­தானை  மனுமீதான பரிசீலனைகள் இடம்பெறவுள்ளது.

அத்துடன் இன்று மனுதாரர்களின் கோரிக்கையான் இடைக்கால தடையை வழங்குவதா இல்லையா என்பது குறித்தும் நீதிமன்றம் தீர்மானிக்கும் என எதிர்ப்பார்க்கபப்டுகின்றது.

நாட்டின் தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் இட­மில்­லாத போதும்,  2005ஆம் ஆண்டு அமுலில் இருந்த 17 ஆவது அர­சி­ய­ல­மைப்பு  திருத்­தத்தின் பிர­காரம் வேறு அமைச்­சுக்­களின் ஆவ­ணங்­களில்  கையெ­ழுத்­திட  ஜனா­தி­ப­திக்கு அதி­கா­ர­மி­ருந்­த­தா­கவும், அதன்­படி 2005 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி ஐந்­தா­வது பிர­தி­வா­தி­யான கோத்­தாபய ராஜ­பக்ஷவின் குடி­யு­ரிமை சான்­றி­தழில் கையெ­ழுத்­திட அப்­போது நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யாக இருந்த 6 ஆவது பிர­தி­வாதியான மஹிந்த ராஜ­பக்ஷ­வுக்கு பூரண அதி­காரம் இருந்­த­தாகவும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா  மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு  தனது நிலைப்­பாட்டை அறி­வித்தார். 

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும், முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோத்­த­பாய ராஜ­பக்ஷ சார்பில்  நேற்று மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் வாதங்­களை முன்­வைத்தே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அத்­துடன் குறித்த குடி­யு­ரிமை சான்­றி­தழில்  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ கையெ­ழுத்­திட்ட 2005 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திக­தி­யன்று, தனது சேவை பெறு­ந­ரான கோத்­தா­பய ராஜ­பக்ஷ மட்­டு­மன்றி மேலும் 20 பேருக்கும் குடி­யு­ரிமை சான்­றி­தழில் கையெழுத்­திட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டிய ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா, அன்­றைய தினம் குடி­யு­ரிமை சான்­றிதழ் வழங்­கப்­பட்­டுள்ள  அந்த 20 பேரையும் கூட இலங்கை பிர­ஜை­யாக ஏற்­றுக்­கொள்ள முடி­யாதா எனவும்  கேள்வி எழுப்­பினார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும், முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோத்­தா­பய ராஜ­பக்­ஷவை இலங்கை பிர­ஜை­யாக ஏற்றுக் கொள்­வதை தடுத்து உத்­த­ர­வொன்றைப் பிறப்­பிக்­கு­மாறு கோரி,  மேன் முறை­யீட்டு நீதி­மன்றில்  'செட்­டி­யோ­ராரி' எழுத்­தானை  மனு,  சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்­க­ளான காமினி வெயங்­கொட மற்றும் பேரா­சி­ரியர் சந்­ர­குப்த தேனு­வர ஆகி­யோரால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள நிலையில், அம்­மனு  நேற்று இரண்­டா­வது நாளாக மூவ­ர­டங்­கிய நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் பரி­சீ­ல­னைக்கு வந்­தது. 

 நேற்று பிற்­பகல் 1.45 மணிக்கு இந்த மனு  மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யசந்த கோதா­கொட தலை­மையில் நீதி­பதி  அர்ஜுன் ஒபே­சே­கர, மஹிந்த சம­ய­வர்­தன ஆகியோர் அடங்­கிய மூவர் கொண்ட நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

இதன்­போது, முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ 2005 ஆம் ஆண்டு இரட்டை பிரஜா உரி­மையைப் பெற்­றுக்­கொண்டமை தொடர்பில் எந்­த­வொரு ஆவ­ணமும் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­திடம் இல்­லாமை தொடர்பில் முடி­யு­மான வரை அவ­ச­ர­மாக சத்­தியக் கட­தாசி ஊடாக நீதி­மன்­றுக்கு விட­யங்­களை முன்­வைக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு  மேன் முறை­யீட்டு நீதி­மன்ற நீதி­ப­திகள் குழாம், குடி­வ­ரவு குடி­ய­கல்வு கட்­டுப்­பாட்­டாளர் நாயகம் சார்பில் முன்­னி­லை­யான சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் நரின் புள்­ளே­விற்கு உத்­த­ர­விட்­டது.

 குறித்த ஆவ­ணங்கள் காணாமல் போயுள்­ளமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்­டிய அதி­காரி யார் என்­பது உள்­ளிட்ட விட­யங்­க­ளையும் அந்த சத்­தியக் கட­தா­சியில் உள்­ள­டக்­கு­மாறும் , அந்த சத்­தியக் கட­தாசி எந்­த­வொரு விசா­ர­ணைக்கும் சமர்ப்­பிக்க முடி­யு­மான வகையில் தயார் செய்­யப்­படல் வேண்டும் எனவும்  தனது உத்­த­ர­வூ­டாக மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் நரின் புள்­ளே­வுக்கு ஆலோ­சனை வழங்­கி­யது.

 இத­னை­ய­டுத்து நேற்­றைய  பரி­சீ­ல­னையின் தொடர்ச்­சி­யாக, இந்த மனுவில் 3 ஆவது பிர­தி­வா­தி­யாக பெய­ரி­டப்­பட்­டுள்ள உள்­நாட்­டு­லு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­வர்­தன சார்பில் மன்­றுக்கு வாதங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி  சானக டி சில்வா ஊடாக இந்த வாதங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.  ஜனா­தி­ப­திக்கு அனைத்து நிறை­வேற்று அதி­கா­ரங்­களும் உள்­ள­தாக  யாரேனும் தர்க்­கித்தால் அது தவ­றா­னது என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சானக டி சில்வா சுட்­டிக்­காட்­டினார். 

இதன்­போது அவர் மேலும் கருத்­துக்­களை முன்­வைக்கில்

' அதி­கா­ரத்தில் மூல­மா­னது ஜனா­தி­பதி அல்ல. அதி­கா­ரத்தின் மூல­மா­னது அர­சி­ய­ல­மைப்பே ஆகும். அர­சாங்­கத்தின் பிர­தா­னி­யாக செயற்­படும் ஜனா­தி­ப­திக்கு, அவ்­வாறு செயற்­பட அர­சாங்­க­மொன்று இருத்தல் வேண்டும்.  அர­சாங்­கத்தின் நோக்கு நிலை மற்றும் கடப்­பாடு என்­பன அமைச்­ச­ர­வி­யி­லேயே தங்­கி­யுள்­ளன. மாற்­ற­மாக  அது தனி நப­ரான ஜனா­தி­ப­தியின் கைகளில் இல்லை. 'என்றார். 

இதன்­போது ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யிடம் கேள்­வி­யொன்­றினை எழுப்­பிய மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி யசந்த கோதா­கொட,  புதிய ஜனா­தி­பதி ஒருவர் தெரிவு செய்­யப்­பட்டு அமைச்­ச­ர­வைக்கு பொறுப்­புக்கள் சாட்­டப்­படும் வரை, அது  அமைச்­ச­ரவை  அதி­கா­ரங்கள்  யாருக்கும் இல்­லையா? என கேட்டார்.

 இதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சானக டி சில்வா,  அமைச்சர் ஒருவர் இல்­லாத என்­பது திணைக்­களம் ஒன்றின் பிர­தா­னியின் கட­மை­க­ளுக்கு பாதிப்பு இல்லை என்­பதால் நாட்டின் நட­வ­டிக்­கை­களை முன்­கொண்டு செல்ல எந்த பாதிப்பும் ஏற்­படப் போவ­தில்லை  என்றார்.

 அத்­துடன் ஜனா­தி­ப­திக்கு நிறை­வேற்று அதி­காரம் அர­சி­ய­ல­மைப்பு ஊடா­கவே கிடைத்­துள்­ள­தா­கவும்,  அவர் அர­சாங்கம் மற்றும் அமைச்­ச­ர­வையின் பிர­தா­னி­யாக இருந்த போதிலும் அரசின் நிர்­வாக அதி­காரம் பாரா­ளு­மன்­றத்­துக்கும் பிர­தமர் உள்­ளிட்ட அமைச்­சர்­வைக்­குமே உள்­ள­தாக சுட்­டிக்­காட்­டிய ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சானக டி சில்வா, அமைச்­ச­ர­வைக்கு உரிய அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்தும் வரம் ஜன­ட­ஹி­ப­திக்கு இல்லை என்றார்.

 அதனால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ 2005 ஆம் ஆண்டு கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் குடி­யு­ரிமை சான்­றி­தழில் கையெ­ழுத்­திட்­டமை  சட்ட விரோ­த­மா­னது எனவும் அவர்  வாதிட்டார்.

 இதன்­போது தலைமை நீதி­பதி யசந்த கோதா­கொட, மனு­தாரர் தரப்பு சட்­டத்­த­ரனி சுரேன் பெர்­ணான்டோ, பிர­தி­வா­திகள் தரப்பின் சட்­டத்­த­ர­ணி­க­ளான சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் நரின் புள்ளே, ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளான ரொமேஷ் டி சில்வா, காமினி மாரப்­பன மற்றும் சானக டி சில்வா ஆகி­யோரை   நீதி­ப­திகள் குழாம் அருகே அழைத்து சுமார் 10 நிமி­டங்கள் வரை மிக நெருக்­க­மாக கலந்­து­ரை­யா­டினார்.

 இத­னை­ய­டுத்து ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சானக  டி சில்வா  தொடர்ந்தும் தனது தரப்பு வாதங்­களை முன்­வைக்கும் போது, 5 ஆம் பிர­தி­வா­தி­யான கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா, எழுந்து குறித்த சட்­டத்­த­ரணி கேட்­டுக்­கொண்ட நேரத்­துக்கும் கூடு­த­லாக நேரத்தை எடுத்­துக்­கொள்­வ­தா­கவும்,  அதனால் நீதி­மன்ற நேரம் வீணா­கு­வ­தா­கவும் குறிப்­பிட்டு எதிர்ப்புத் தெரி­வித்தார்.

 எனினும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சானக டி சில்­வா­வுக்கு தொடர்ந்து கருத்­துக்­களை முன்­வைக்க தலைமை நீதி­பதி யசந்த கோதா­கொட அனு­ம­தி­ய­ளித்தார். இத­னை­ய­டுத்து மீள விட­யங்­களை தெளி­வு­ப­டுத்­திய ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சானக டி சில்வா, தனது சேவை பெறுநர் தற்­போது விட­யத்­துக்கு பொறுப்­பான அமைச்­ச­ராக இருக்கும் நிலையில், அவர் கூட கோத்­தா­ப­யவின்  இரட்டை பிரஜா உரிமை தொடர்­பி­லான ஆவ­ணங்­களை இது­வரை கண்­ட­தில்லை என தெரி­வித்தார்.

 சுமார் 3 மணி நேரம் விட­யங்­களை தெளி­வு­ப­டுத்­திய  சட்­டத்­த­ரணி சானக டி சில்­வாவின் வாதங்­களின் நிறைவில் சிறு இடை­வேளை ஒன்­றினை அறி­வித்த நீதி­மன்றம் அத­னை­ய­டுத்து 5 ஆம் பிர­தி­வா­தி­யான கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் சட்­டத்­த­ரணி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்­வா­வுக்கு வாதிட சந்­தர்ப்பம் அளித்­தது.

 இதன்­போது வாதத்தை ஆரம்­பித்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா,  ""அர­சி­ய­ல­மைப்பு மீயு­ர­ரா­னது என்ற போதிலும் அத­னையும் விட  பொது மக்­களின் அதி­காரம் உயர்ந்­தது என்றார். அத்­துடன் '  17 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தின் பிர­காரம்  பொது மக்­களால் தேர்ந்­தெ­டுக்­க­பப்டும் ஜனா­தி­ப­திக்கு நிறை­வேற்று அதி­காரம் இருந்­தது. அதன்­படி அமைச்­சர்­களை நிய­மிப்­பது, அவர்­க­ளுக்­கான பொறுப்­புக்­களை சாட்­டு­வது,  போன்று  தனக்கு தேவை­யான அமைச்­சுக்­களை தன் வசம் வைத்­தி­ருக்கும் அதி­கா­ரமும் அப்­போது ஜனா­தி­ப­திக்கு இருந்­தது.  அந்த அர்­சி­ய­ல­மைப்பு விதி­வி­தாங்­களின் கீழ்,  ஜனா­தி­ப­திக்கு தனக்கு தேவை­யான விட­யங்­களை தனது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்க முடியும். அதே போல்  ஒரு அமைச்­ச­ருக்கு பொறுப்புச் சாட்­டப்­ப­டாத விடயம் ஒன்று ஜன­ட­ஹி­ப­தியின் கீழேயே இருக்கும் என அர­சி­ய­ல­மைப்பில் கூறப்­பட்­டுள்­ளது.' என்றார்.

 இதன்­போது தலை­யீடு செய்த தலைமை நீதி­பதி யசந்த கோதா­கொட, தற்­போது 19 ஆவது திருத்தம் அமுலில் உள்ள சூழலில் ஜனா­தி­ப­திக்கு  தனது அதி­கா­ரத்தில் உள்ள 3  விட­ய­தா­னங்­க­ளுக்கு மேல­தி­க­மான ஆவ­ணங்­களில்  கையெ­ழுத்­திட முடி­யுமா? என கேள்வி எழுப்­பினார்.

இதற்கு பதி­ல­ளித்த ஜன­ட­ஹி­பதி சட்­டத்­த­ரணி  ரொமேஷ் டி சில்வா

' தற்­போ­தைய  அர­சி­ய­ல­மைப்பின் கீழ் அந்த இய­லுமை இல்­லாமல் இருந்­தாலும் கூட, 2005 ஆம் ஆண்டு அமுலில் இருந்த 17 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­த­துக்கு அமைய அதற்­கான இய­லுமை இருந்­தது.' என்றார். தொடர்ந்து தனது வாதங்­களை பதிவு செய்த அவர் ' 2005 நவம்பர் மாதம் 21 ஆம் திகதி 5 ஆவது பிர­தி­வ­ட­ஹி­யான கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் குடி­யு­ரிமை சான்­றி­தழில் கையெ­ழுத்­திடும் அதி­காரம்  அப்­போது நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யான 6 ஆம் பிர­தி­வாதி  மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு இருந்­தது.  குறித்த நாளில் எனது சேவை பெறு­ந­ருக்கு மேல­தி­க­மாக அவர் மேலும் 20 பேரின் குடி­யு­ரிமை சான்­றி­தழில் கையெ­ழுத்­திட்­டுள்ளார். அப்­ப­டி­யானால்  அன்­றைய தினம் குடி­யு­ரிமை சான்­றிதழ் பெற்­றுக்­கொன்ட ஏனைய 20 பேரையும் கூட இந் நாட்டின் பிர­ஜை­க­ளாக ஏற்­றுக்­கொள்ள முடி­யாதா?

 இந்த மனு மீது சிறிது அவ­தானம் செலுத்­துங்கள். இம்­ம­னுவில் மூன்­றா­வது பிர­தி­வாதி அமைச்சர் வஜிர அபே­வர்­தன. அவ­ரது பெயரின் முன்னாள் ' கெள­ரவ' எனும் பதம் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனினும் 6 ஆவது பிர­தி­வாதி இந் நடடில் இரு முறை ஜனா­தி­ப­தி­யாக இருந்­தவர். தற்­போ­தைய எதிர்க்­கட்சித் தலைவர்.  அவ­ரது பெயரின் முன்னாள்  அந்த கெள­ரவ பதம்  இடப்­ப­ட­வில்லை.  ஏனெனில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு  மிக நெருக்­க­மான இரு மனு­தா­ரர்­களும், இந்த மனுவை  அர­சியல் உள்­நோக்­கத்­தி­லேயே தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுதாரர்கள் 5 ஆம் பிரதிவாதி கோத்தாபய ராஜபக்ஷ்வை சிறையில் தள்ள கடுமையாக முயன்றவர்கள்.  அண்மையில் கோத்தாபயவை கைது செய்ய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக வெளியான செய்தியால் மிகவும் சந்தோஷமடைந்து பின்னர் அது போலியான செய்தி என்பதை அறிந்து வருத்தப்பட்டவர்கள். இவ்வாறான அரசியல் உள் நோக்கத்துடனேயே இந்த மனுதாரர்கள் இடைக்கால தடை உத்தர்வுகளை கோருகின்றனர்.  

2005 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி  அப்போதைய ஜனாதிபதியான 6 ஆவது பிரதிவாதி மஹிந்த ராஜபக்ஷ இந்த குடியுரிமை சான்றிதழில் கையெழுத்திட்டமை  தவறான நடவடிக்கை எனில்,  30 வருட கால யுத்ததத்தை நிறைவு செய்த போது, கடந்த 15 வருடங்களில் அவரது நடவடிக்கைகள்  ஏன் சவாலுக்கு உட்படுத்தப்படவில்லை' என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா கேள்வி எழுப்பினார்.

 இதனையடுத்து அவரது வாதங்கள் நிறைவுக்கு வந்த நிலையில் இன்று மீண்டும் இந்த மனு மீதான பரிசீலனைகள் இடம்பெறவுள்ளது. அத்துடன் இன்று மனுதாரர்களின் கோரிக்கையான் இடைக்கால தடையை வழங்குவதா இல்லையா என்பது குறித்தும் நீதிமன்றம் தீர்மானிக்கும் என எதிர்ப்பார்க்கபப்டுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55