தந்தையின் வழியிலே எனது பயணத்தை மேற்கொள்வேன் - சஜித் 

Published By: Vishnu

03 Oct, 2019 | 07:03 PM
image

(எம்.ஆர்.எம், வஸீம், நா. தினுஷா)

நாட்டுக்கு பொருத்தமில்லாத, பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒப்பந்தத்திலும் நானோ ஐக்கிய தேசிய கட்சியோ கைச்சாத்திடப்போவதில்லை என அமைச்சரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்துடன் வெற்றிபெற்ற பின்னர் சமுக உடன்படிக்கைக்கு சென்று மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். 

எமது அரசாங்கத்தில் குடும்ப ஆட்சியை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். எனது தந்தையின் வழியிலே எனது பயணத்தை மேற்கொள்வேன் என்றும் அவர் கூறினார். 

ஐக்கிய தேசிய கட்சியின் கட்சி சம்மேளனம் மற்றும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் விசேட கூட்டம் இன்று சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

1993இல் எனது தந்தை ரணசிங்க பிரேமதாச உயிரிழந்த பின்னர் அந்த பொறுப்பை ஐக்கிய தேசிய கட்சி 2019இல் எனக்கு வழங்கி இருக்கின்றது. எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பை எனது உயிருக்கும் மேலாக கருதி நிறைவேற்ற பாடுபடுவேன். நான் இந்த  இடத்துக்குவர கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் விட்டுக்கொடுப்பும் பொறுமையுமே காரணமாகும். அவரின் இந்த தியாகத்தை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். அதேபோன்று சபாநாயகர் கருஜயசூரியவின் தியாகத்தையும் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன்.

மேலும் மக்களின் ஆதரவுடன் நான் ஜனாதிபதியானவுடன் நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தியில் இலங்கை வரலாற்றில் ஒருபோதும் இல்லாத புரட்சிகரமான மாற்றத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56