2 ஆம் உலகப்போர் விமானம் விபத்தில் சிக்கியது : 7 பேர் பலி !

Published By: R. Kalaichelvan

03 Oct, 2019 | 05:20 PM
image

அமெரிக்காவின் ஹார்ட்போர்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற போயிங் பி -17 என்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

2 ஆம் உலகப்போரில் ஜெர்மனி படையினருக்கு எதிராக குண்டுகளை வீசிய போர் விமானமே இவ்வாறு 13 பயணிகளுடன் பயணித்துள்ளது.

குறித்த போர் விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் திடீரென தரையிறங்க முயற்சித்துள்ளது. இந்நிலையில் குறித்த விமானம் தரையில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விமானம் விபத்திற்குள்ளானதில் பிராட்லி சர்வதேச விமானத்தில் உள்ள பராமரிப்பு நிலையம் ஒன்றின் மீது மோதியுள்ளது.

இவ்விபத்திலேயே 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். சம்பவத்தின்போது விமானத்தில் 3 விமானிகள் மற்றும் 10 பயணிகள் இருந்துள்ளனர்.

அத்தோடு கடந்த 1987 ஆம் ஆண்டு இவ் விமானம் சாகச நிகழ்வொன்றில் பங்குபற்றிய போது விபத்துக்குளானதில் பலர் கயமடைந்ததோடு , விமானமும் சேதமடைந்திருந்தது.

இந்நிலையிலலேயே மீண்டும் குறித்த விமானம் சரி செய்யப்பட்டு சேவைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் விபத்தில் சிக்கி தரையில் விழுந்து தீ பற்றி எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52