புறக்­க­ணிக்­கப்­பட்ட நிலையில்  மன்னார் மாவட்ட தமி­ழர்கள்

Published By: Digital Desk 3

03 Oct, 2019 | 02:48 PM
image

இலங்­கையின் ஒன்­பது மாகா­ணங்­களில் வட மாகா­ணத்தின் ஐந்து மாவட்­டங்­களில் ஒன்­றாக மன்னார் மாவட்டம் விளங்­கு­கின்­றது. தேர்தல் தொகு­தி­களில் வன்­னி­மா­வட்­டத்­தி­லுள்ள மூன்று தொகு­தி­க­ளி­லொன்­றா­கவும் இது இடம்­பெ­று­கின்­றது. இம்­மா­வட்­டத்தில் மன்னார் பட்­டினம், மாந்தை மேற்கு, மடு, நானாட்டான், முசலி ஆகிய ஐந்து பிர­தேச செய­லகப் பிரி­வு­களும் இயங்கி வரு­கின்­றன. அதேபோல் மன்னார் மாவட்­டத்­தி­லுள்ள பாட­சா­லைகள் மன்னார் மற்றும் மடு ஆகிய இரு கல்வி வல­யங்­களில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் மன்னார் கல்வி வல­யத்­தி­லுள்ள சித்­தி­வி­நா­யகர் இந்துக் கல்­லூரி, புனித சவே­ரியார் ஆண்கள் பாட­சாலை, புனித சவே­ரியார் பெண்கள் பாட­சாலை ஆகிய மூன்று தமிழ்ப் பாட­சா­லை­களும் மத்­திய அர­சாங்­கத்தின் நிர்­வா­கத்­தி­லுள்ள தேசிய பாட­சா­லை­க­ளாகும்.

வர­லாற்று ரீதி­யாக நோக்­கும்­போது இப்­பி­ர­தேசம் பல ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட இந்துத் தமி­ழர்­களின் பண்­டைய இருப்பை, சிறப்பை, ஆளு­மையை, வளத்தை வெளிப்­ப­டுத்தி நிற்­கின்­றது. விஜயன் இந்­தி­யா­வி­லி­ருந்து இலங்­கையில் கரை­யொ­துங்­கிய இரண்­டா­யி­ரத்து ஐந்­நூறு ஆண்­டு­க­ளுக்கு முந்­திய காலத்தில் இங்கு இந்­துக்­களின் புனி­த­மிகு வழி­பாட்டுத் தல­மான திருக்­கே­தீஸ்­வரம் இருந்­த­மையை மகா­வம்சம் போன்ற சிங்­கள காவிய நூல்கள் மூலம் அறிய முடி­வ­துடன், சேர் போல் ஈ. பீரிஸ், சூசைப்­பிள்ளை தொம்­மா­னுப்­பிள்ளை போன்ற வர­லாற்று ஆய்­வா­ளர்­களும் தெளி­வாக வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். ஆறாம் நூற்­றாண்டு காலப்­ப­கு­தி­யிலும், அடுத்த நூற்­றாண்­டிலும் தேவார முத­லிகள் என்று போற்­றப்­படும் திரு­ஞா­ன­சம்­பந்­த­மூர்த்தி நாய­னாரும், சுந்­த­ர­மூர்த்தி நாய­னாரும் முறையே “விரு­து­குன்­றமா மேருவில்” என்று தொடங்கும் தேவாரத் திருப்­ப­தி­கத்­தையும் “நத்­தார்­படை ஞானன்” என்று தொடங்கும் தேவாரத் திருப்­ப­தி­கத்­தையும் பாடி­யுள்­ளனர்.

அதா­வது புத்த பெரு­மானும், இயேசு பெரு­மானும், நபி பெரு­மானும் இப்­பூ­மியில் பிறக்­கு­முன்பே சிவ­பெ­ரு­மானின் திருக்­கோ­யி­லான கேதீஸ்­வரம் சிறப்­புடன் இருந்­தமை வர­லாற்றின் மூலம் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

மன்னார் பிர­தேசம் போர்த்­துக்­கே­யரால் பதி­னேழாம் நூற்­றாண்டின் முற்­ப­கு­தியில் கைப்­பற்­றப்­படும் வரை நல்­லூரைத் தலை­ந­க­ர­மாகக் கொண்­டி­ருந்த யாழ்ப்­பாணத் தமிழ் அரசின் ஒரு பகு­தி­யா­கவே இருந்­துள்­ளது. இது வர­லாறு எடுத்துக் கூறும் யதார்த்­த­மான உண்­மை­யாகும். இன்று இம்­மா­வட்­டத்தில் இந்துத் தமி­ழர்­களும் கத்­தோ­லிக்கத் தமி­ழரும் இஸ்­லா­மியத் தமி­ழரும் வாழ்ந்து வரு­கின்­றனர்.

கடற்­றொழில், கமத்­தொழில், கால்­நடை வளர்ப்பு இம்­மா­வட்ட மக்­களின் பாரம்­ப­ரிய தொழில்­க­ளாக விளங்கி வரு­கின்­றன. மூன்று மதத்­த­வர்கள் இம்­மா­வட்­டத்தில் வாழ்ந்து வந்­த­போ­திலும் அர­சாங்­கத்தால் வழங்­கப்­படும் வளங்கள் அனைத்து சமூ­கங்­க­ளுக்கும் சம­மாகப் பகி­ரப்­ப­டு­வ­தில்லை. வச­தி­களும் அவ்­வாறே சமத்­து­வ­மாக வழங்­கப்­ப­டு­வ­தில்லை. பார­பட்சம் நில­வு­வ­தாகத் தொடர்ந்து குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டே வரு­கின்­றன. ஆனால், இவற்றைப் பொறுப்­புடன் எவரும் கவ­னத்தில் கொள்­வ­தில்­லை­யென்றும் கூறப்­ப­டு­கின்­றது.

தமிழ் மக்கள் குறிப்­பாக இந்­துக்கள் வாழும் கிரா­மங்கள் சகல வழி­க­ளிலும் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­வதை ஆய்­வுகள், மதிப்­பீ­டுகள் மூலம் அறிய முடி­கின்­றது. கடந்­த­கால யுத்த சூழ்­நி­லையால் பெரிதும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் இம்­மா­வட்ட தமிழ் மக்கள் உள்­ளனர். வாழ்­வி­டங்­க­ளையும், சொத்து சுகங்­க­ளையும், உற­வு­க­ளையும் இவ்­வாறு பல இழப்­பு­க­ளையும் இழந்­த­வர்­க­ளாக இவர்கள் உள்­ளனர்.

யுத்தம் முடி­வுற்ற பின் வடக்கின் வசந்தம் என்று கூறி வட­மா­கா­ணத்தில் பல அபி­வி­ருத்­திகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. மக்கள் தமது சொந்­தக்­கா­ணி­களில் மீளவும் குடி­யேற்­றப்­ப­டு­வ­தா­கவும், வீட்டு வச­திகள் உள்­ளிட்ட சகல அடிப்­படைத் தேவை­களும் நிறை­வேற்றிக் கொடுக்­கப்­ப­டு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது. யுத்தம் நிறைவு பெற்று பத்து ஆண்­டுகள் நிறை­வ­டையும் நிலையில் மன்னார் மாவட்ட தமிழ்க் கிரா­மங்­களை எந்­த­வொரு அபி­வி­ருத்தித் திட்­டமும் எட்­டியும் பார்க்­காத நிலையே காணப்­ப­டு­கின்­றது.

சில தீய சக்­திகள் மக்­களின் அன்­றாட மற்றும் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­பதை விட்டு இந்துத் தமி­ழர்­க­ளையும், கத்­தோ­லிக்கத் தமி­ழ­ரையும் மோத விட்டு இலாபம் பெறும் கீழ்த்­த­ர­மான செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வரு­வ­தையும் காணக்­கூ­டி­ய­தா­யுள்­ளது. குறித்த இரு­ம­தத்­த­வரும் ஊர் இரண்­டு­பட்டால் கூத்­தா­டிக்கும் கொண்­டாட்டம் என்ற முது­மொ­ழியை உணர்ந்­த­வர்­க­ளா­யில்­லா­மையே வேதனை தரு­கின்­றது.

மன்னார் மாவட்­டத்­தி­லுள்ள பொது­வா­கவே அனைத்து தமிழ்க் கிரா­மங்­களும் உள்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளற்­ற­வை­யா­கவே காணப்­ப­டு­கின்­றன. தமிழ்க் கிரா­மங்­களில் வீதி வச­திகள் செய்து கொடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. வீதிகள் அநே­க­மாக குன்றும் குழி­யு­மா­க­வி­ருப்­ப­துடன் அனைத்­துமே மண்­ணா­லான வீதி­க­ளா­க­வே­யுள்­ளன. வவு­னி­யா­வி­லி­ருந்து மன்னார் செல்லும் பிர­தான வீதியும், தமிழ்க் கிரா­மங்­களை ஊட­றுத்துச் செல்லும் வீதி­களும் இதற்குத் தக்க சான்­றாக விளங்­கு­கின்­றன.

தமிழ்க் கிரா­மங்­களில் மக்கள் அநே­க­மாகத் தற்­கா­லிகக் கொட்­ட­கை­க­ளி­லேயே வாழ்­கின்­றனர். குடி­நீர்­வ­சதி, பாட­சாலை வசதி, அஞ்சல் வசதி, வைத்­தி­ய­சாலை வசதி, போக்­கு­வ­ரத்து வசதி என்­பன இன்னும் பொது­வா­கவே பட்­டி­ய­லிடக் கூடிய குறை­பா­டு­க­ளாகும். இந்­திய அர­சாங்­கத்தால் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கென தீர்­மா­னித்து வழங்­கப்­பட்ட வீடுகள் உரி­ய­படி வழங்­கப்­ப­டாது, தமி­ழர்கள் புறக்­க­ணிக்­கப்­பட்டு பிற­மா­வட்­டங்­களில் வாழும் பிற சமூ­கத்­த­வர்­க­ளுக்கு அர­சியல் அதி­கா­ரத்தின் மூலம் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ள­தான குற்­றச்­சாட்டு இது­வரை உரி­ய­படி ஆய்வு செய்­யப்­பட்டு நியாயம் வழங்­கப்­ப­ட­வில்லை என்­பது பொது மக்­களின் குற்­றச்­சாட்­டா­யுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கென நிர்­மா­ணிக்­கப்­பட்டு வழங்­கப்­பட்ட வீடுகள் பல எவரும் குடி­யே­றா­ததால் பூட்டி வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் அவற்றை சூழ காடுகள் வளர்ந்­து­முள்­ள­தாக அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளது.

பாட­சா­லை­களைப் பொறுத்­த­வரை பெரு­ம­ளவு ஆசி­ரிய பற்­றாக்­குறை தமிழ்ப் பாட­சா­லை­களில் நில­வு­வதும் குறிப்­பாக இந்து சமயம், கணிதம், விஞ்­ஞானம், ஆங்­கிலம் ஆகிய பாடங்­க­ளுக்­கான ஆசி­ரிய வெற்­றி­டங்கள் நிரப்­பப்­ப­டா­ம­லுள்­ள­மையும் தெரிய வரு­கின்­றது. பல பாட­சா­லை­களில் பௌதீக வளப்பற்­றாக்­கு­றை­களும் காணப்­ப­டு­கின்­றன.

தமிழ்ப் பாட­சா­லைகள் பல­வற்றில் சுற்­று­ம­திலோ வேலியோ அற்ற நிலையால் பாது­காப்புப் பிரச்­சினை நில­வு­கின்­றது. அத்­துடன் மல­ச­ல­கூட வச­திகள், குடிநீர் வச­திகள் போன்­றவை இன்­மையும் காணப்­படும் குறை­பா­டு­களில் முக்­கி­ய­மா­ன­வை­யாகும்.

பாரம்­ப­ரிய விவ­சாய நிலங்­களில் பல கார­ணங்கள் காட்­டப்­பட்டு அவற்றில் விவ­சாயம் செய்­வதும், வேற்று சமூ­கங்­களால் ஆக்­கி­ர­மிப்­புக்­குள்­ளா­கி­யி­ருப்­பதும் தமிழ் விவ­சா­யிகள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களில் அடங்­கு­கின்­றன. கால்­ந­டை­க­ளுக்­கான மேய்ச்சல் நில­மின்மை, நீர்­வ­ச­தி­யின்மை என்­பன கால்­நடை வளர்ப்­புக்குத் தடை­யா­க­வுள்­ளன. மீள்­கு­டி­யேற்­றப்­பட்ட தமிழ் மக்கள் வாழும் கிரா­மங்­களில் முறை­யான அடிப்­படைத் தேவை­களை நிறை­வேற்­று­வது யார் என்ற வினா எழு­கின்­றது. அர­சியல் அதி­கா­ரத்தை அநா­க­ரி­க­மான முறையில் சிலர் செயற்­ப­டுத்­தி­யதன் விளைவே தமிழ்க்­கி­ரா­மங்கள் புறக்­க­ணிப்­புக்­கான கார­ண­மென்­கின்­றனர் பாதிக்­கப்­பட்ட மக்கள்.

மாவட்­டத்தின் தமிழ்ப் பிர­தி­நி­தி­களோ, மாகா­ண­ச­பை­யி­லி­ருந்த தமிழ்ப் பிர­தி­நி­தி­களோ, உள்­ளூ­ராட்சி சபை­க­ளி­லுள்­ளோரோ மன்னார் மாவட்ட தமிழ் மக்­களின் நலனில் அன்­றாட தேவை­களை நிறை­வேற்­று­வதில் உரி­ய­படி போதிய அக்­கறை காட்­ட­வில்லை, செயற்­ப­ட­வில்­லை­யென்ற குற்­றச்­சாட்டை மறுக்க முடி­யாது. உண்மை நிலை, யதார்த்த நிலை அது­வா­க­வே­யுள்­ளது.

இது மட்­டு­மல்ல அர­சியல் அதி­கா­ரத்­துடன் வழங்­கப்­படும் அரச வேலை­வாய்ப்­பு­க­ளிலும் மன்னார் மாவட்டத் தமி­ழர்கள் புறக்­க­ணிக்­கப்­பட்டு வெளி மாவட்­டத்தைச் சேர்ந்த தமிழர் அல்­லாதோர் பெரு­ம­ளவு இணைக்­கப்­ப­டு­வதன் மூலம் தகை­மை­யி­ருந்தும் தமி­ழர்கள் வேலை­வாய்ப்பு இன்றிப் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். தொழில்­வாய்ப்­பு­களில் புறக்­க­ணிக்­கப்­படும் தமி­ழர்கள் தொடர்பில் எவரும் கவனம் செலுத்­து­வ­தாகத் தெரி­ய­வில்லை.

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் எங்கு நிலத்தை அகழ்ந்­தாலும் மாணிக்­கக்கல் கிடைப்­பது போல மன்னார் மாவட்­டத்தில் அகழும் போது மண்டை ஓடு­களும், மனித எலும்புக் கூடு­களும் கிடைக்கும் என்று கூறத்­தக்­க­தாக அண்­மையில் இரு இடங்­களில் காணப்­பட்ட மனித எச்­சங்கள் உள்­ளன. மன்னார் மாவட்ட தமிழ் மக்­க­ளது நியா­ய­மான கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­பட வேண்டும். தொடர் புறக்­க­ணிப்­பி­லி­ருந்து மீட்கப்படவேண்டும். அவர் சகல வளங்களும் பெற்று நிம்மதியாக வாழும்நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22