ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒருங்­கி­ணைந்த தீர்­மானம் எடுப்­பதன் அவசியம் குறித்து சிவில் சமூகப்பிர­தி­நி­திகள் வலி­யு­றுத்தல்

Published By: R. Kalaichelvan

03 Oct, 2019 | 01:26 PM
image

(ஆர்.யசி)

ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­களை ஒரு அணி­யாக்கி தமிழ் மக்­களின் வாக்­கு­களை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக்க வேண்டும் என்ற நோக்­கத்தில் யாழ். மாவட்ட மத தலை­வர்கள்,  வடக்கு கிழக்கு மற்றும் வடக்­கு-­கி­ழக்­கிற்கு வெளியில் இயங்கும் தமிழ் சிவில் அமைப்பின் பிர­தி­நி­திகள் நேற்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர்  கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் ஆகி­யோரை சந்­தித்­துள்­ளனர். வடக்கு முன்னாள் முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னையும் அவர்கள் இன்று சந்­திக்­க­வுள்­ளனர்.

 முதல்­கட்ட பேச்­சுக்­களை இவ்­வாறு அவர்கள் முன்­னெ­டுத்­துள்ள நிலையில் பிர­தான கட்­சிகள் கட்­டுப்­பணம் செலுத்­தி­யதும் மீண்டும் அடுத்த வாரம் இரண்டாம் சுற்றுப் பேச்­சுக்­களை இந்தக் கட்­சிக்­க­ளுடன் நடத்­து­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

இது குறித்து சந்­திப்பில் கலந்­து­கொண்ட அருட்­தந்தை சக்­திவேல் கூறு­கையில்:-

இன்று ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு நாம் அனை­வரும் முகங்­கொ­டுக்­க­வுள்ள நிலையில் தமிழ் மக்கள் யாரை ஆத­ரிப்­பது என்­பது குறித்து தெரி­யா­துள்­ளது. இதில் தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சிகள் என்ன செய்­யப்­போ­கின்­றன என்­பதும் எமக்கு தெரி­ய­வில்லை. இன்று தமிழ் கட்­சிகள் அனைத்­துமே பிள­வு­பட்டு தனித்­த­னியே இயங்கி வரு­கின்­றமை தமிழ் மக்­களை பொறுத்­த­வ­ரையில் பாரிய பிரச்­சி­னை­யாக உள்­ளது. இன்று  தமிழ் மக்கள் பேரம் பேசும்  சக்­தி­யாக இருந்தும் கூட எம்மால் பல­மான சக்­தி­யாக இயங்க முடி­யா­துள்­ள­மைக்கு பிர­தான காரணம் இந்த கட்­சி­களின் பிள­வு­க­ளே­யாகும்.

 ஆகவே தேர்­தலில் தமிழ் மக்கள் பிர­தான கட்­சி­களை ஆத­ரிக்க முன்னர் தமிழ் மக்­களின் பிர­தி­நிதிக் கட்­சிகள் ஒரு அணி­யாக வேண்டும் என்­பதே எமது நோக்­க­மாகும். இதில் பிர­தான தமிழ் கட்­சி­களை சந்­தித்து பேசும் நோக்­கத்தில் இன்று காலையில் ( நேற்று) தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர்.சம்­பந்தன் அவர்­களை சந்­தித்தோம். அவ­ரிடம் இந்த கார­ணி­களை எடுத்­துக்­கூ­றினோம். அதேபோல் பிற்­பகல் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லத்தை சந்­தித்தோம். அவ­ரி­டமும் நாம் இதே கார­ணி­களை எடுத்­துக்­கூ­றினோம்.

எனினும் அவர்கள் தமது தரப்­புடன் தனித்­த­னியே கலந்­து­ரை­யாடி ஒரு தீர்­மானம் எடுப்­ப­தா­கவும், தமிழ் மக்கள் விட­யத்தில் இணைந்து பய­ணிப்­பது நன்­மை­யா­னது என்பதை தாமும் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார். நாளைய தினம் ( இன்று) வடக்கு முன்னாள் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனை சந்திக்க தீர்மானம் எடுத்துள்ளோம். இவர்கள் அனைவரையும் ஒரு அணியாக திரட்டுவதே எமது நோக்கமாக உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04