தளபதியுடன் இணைந்த பாக்யராஜின் வாரிசு

Published By: Daya

03 Oct, 2019 | 12:25 PM
image

பாக்யராஜின் வாரிசும், இளம் நடிகருமான சாந்தனு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இயக்குனராகவும், நடிகராகவும் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ‘முருங்கைகாய் ’புகழ் கே. பாக்யராஜ். அவரது வாரிசான சாந்தனு பாக்யராஜ், தமிழக ரசிகர்களின் மனதில் ஒரு நடிகராக இடம் பிடிக்க போராடி வருகிறார். 

‘சக்கரைக்கட்டி’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும், அதன்பிறகு 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை வணிகரீதியான வெற்றிப்படங்களை கொடுக்காததால் முன்னணி இளம் நடிகர்களின் பட்டியலில் இடம் பெறாமல் இருக்கிறார். அவருக்கு விஜய் நடிப்பில் தயாராகவிருக்கும் ‘தளபதி 64’ என்ற படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் ஏற்கெனவே மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘சர்க்கார்’ படத்தின் கதை பிரச்சினை தொடர்பாக கே.பாக்யராஜுக்கும், சர்க்கார் படத்தின் இயக்குனர் முருகதாசுக்கு மிடையே சிக்கல் எழுந்தபோது தளபதி விஜயின் ரசிகரான சாந்தனு, விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால், விஜயின் மனதில் இடம் பிடித்தார். 

அத்துடன் அவர் நடிக்கவிருக்கும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் வாய்ப்பினையும் பெற்றிருக்கிறார். ‘தளபதி 64’ படத்திற்கு பிறகு சாந்தனு பாக்யராஜுக்கு தமிழ்த் திரையுலகில் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நடிகர் சாந்தனு பாக்யராஜ், தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘கசடதபற’ என்ற படத்திலும், தனசேகரன் இயக்கத்தில் ‘வானம் கொட்டட்டும்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35