அனைத்து சவால்­க­ளையும் முறியடித்து தேர்­தலில் வெற்றிபெறுவேன் - கோத்தாபய

Published By: Digital Desk 3

03 Oct, 2019 | 12:14 PM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

ஜனா­தி­பதி தேர்­தலில் ஜன­நா­யக ரீதியில் போட்­டி­யிட்டு வெற்றி பெற முடி­யா­த­வர்கள் இன்று  பாரிய அர­சியல் சூழ்ச்­சி­களை முன்­னெ­டுத்­துள்­ளார்கள். அனைத்து சவால்­க­ளையும் வெற்­றி­கொண்டு நிச்­சயம் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்றிப்பெறுவேன் என பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பய ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா மாஜன கட்­சியின் தேசிய மாநாடு நேற்று குரு­நாகல்  நகரில்   இடம் பெற்­றது . இந்­நி­கழ்வில் கலந்துக் கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில்

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டதை தொடர்ந்து இடம் பெற்ற தொழிற்­சங்­கத்­தி­னதும், சிவில் அமைப்­புக்­க­ளி­னதும் தேசிய மாநா­டு­களில் கைய­ளிக்­கப்­பட்ட பரிந்­து­ரைகள் அனைத்தும் எமது ஆட்­சியில் நிறை­வேற்­றப்­படும்.

தேசிய பாது­காப்பு , தேசிய பொரு­ளா­தாரம் இரண்டும் ஒரு நாட்டின் முன்­னேற்­றத்­திற்கு அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும். ஆனால் எமது நாட்டில் இவ்­வி­ரண்டு விட­யங்­களும் இன்று கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்­டுள்­ளன.  அர­சியல் பழி­வாங்கல், இரா­ணு­வத்­தினர் பழி­வாங்கல் உள்­ளிட்ட தேவை­யற்ற கார­ணி­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­ட­மை­யினால் தேசிய பாது­காப்பு வேண்­டு­மென்றே   பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

பொலிஸ்­த­ரப்­பினர் தொடர்பில் இன்று சமூ­கத்தின் மத்­தியில் பல மாறுப்­பட்ட கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. பொலி­ஸாரின் அடிப்­படை தேவைகள் நிறை­வேற்றிக் கொடுக்­கப்­ப­ட­வில்லை. கடந்த அர­சாங்­கத்தின் முன்­னெ­டுத்த செயற்­திட்­டங்கள் அனைத்தும் அர­சியல் பழி­வாங்­க­ளுக்­காக நிறுத்­தப்­பட்­டது.  எமது ஆட்­சியில் மீண்டும் பொலிஸ் தரப்­பி­ன­ரது அடிப்­படை பிரச்­சினை,  பதவி உயர்வு ஆகி­ய­வற்­றிற்கு முறை­யான தீர்வு  பெற்றுக் கொடுக்­கப்­படும்.

பொரு­ளா­தார நெருக்­க­டி­களை எதிர்க் கொண்ட நிலை­யி­லேயே  யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வரும் நோக்கில் 3 இலட்சம் இரா­ணுவ வீரர்கள் இணைத்துக் கொள்­ளப்­பட்­டனர். இதன் கார­ண­மா­கவே 30 வருட கால யுத்தம் குறு­கிய காலத்­திற்குள்  முடி­விற்கு கொண்டு வரப்­பட்­டது.

தேசிய பரீட்­சை­களில் வெற்றிக் கொண்டால் மாத்­திரம் எதிர்­காலம் என்­பது கிடை­யாது. பரீட்­சையில் தோல்­வி­ய­டைந்த மாண­வர்­களின் வாழ்க்­கை­யினை முன்­னேற்றும் திட்­டங்கள் ஆட்­சிக்கு வந்து முதல் காலாண்­டுக்குள்   செயற்­ப­டுத்­தப்­படும்.  உயர்­கல்­வி­யினை பெற்றுக் கொண்டால் மாத்­தி­ரமே சர்­வ­தே­சத்தை வெற்றிக் கொள்ள முடியும். இதற்­கான செயற்­திட்­டங்­க­ளையும் எவ்­வித வேறுப்­பா­டு­களும் இன்றி பெற்றுக் கொடுக்­கப்­படும்.

சிவில் யுத்­தத்தின் கார­ண­மாக பொரு­ளா­தா­ரத்தில் முன்­னேற்­ற­ம­டைய முடி­யாமல் போனது. யுத்­தத்தை வெற்றிக் கொண்டு குறு­கிய காலத்­திற்குள் அபி­வி­ருத்­தி­களை செய்தோம். எவரும் எதிர்­பா­ராத வகையில் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.  நல்­லாட்சி அர­சாங்கம் எவ்­வித கொள்­கை­க­ளையும், முறை­யான திட்­டங்­களும் இன்றி ஆட்­சிக்கு வந்­த­மை­யி­னாலே பொரு­ளா­தா­ரத்தை முன்­னேற்ற முடி­ய­வில்லை.

பொரு­ளா­தா­ரத்தை முன்­னேற்­று­வ­தற்கு ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­யி­லான அர­சாங்கம் கவனம் செலுத்­த­வில்லை. அதி­கா­ரத்தை பிர­யோ­கித்து எதிர் தரப்­பி­னரை பழிவாங்கியதால் தேசிய பொருளாதாரம் உட்பட தேசிய  பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக ரீதியில் போட்டியிட முடியாதவர்கள். இன்று பல சூழ்ச்சிகளை பிரயோகித்து  நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளார்கள். தோன்றியுள்ள அனைத்து  சவால்களையும் எதிர்க் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுவேன்.என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15