அத்­தா­வுத, ஏக்­க­நா­யக்க சஜித்­துக்கு ஆத­ரவு

Published By: R. Kalaichelvan

03 Oct, 2019 | 11:50 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மூத்த அர­சி­யல்­வா­தி­க­ளான டபிள்யூ.பி. ஏக்­க­நா­யக்க மற்றும் அத்தா­வுத சென­வி­ரத்ன ஆகியோர் என்­னுடன் இணைந்­து­கொண்­டி­ருப்­பது எனது வெற்­றிப்­ப­ய­ணத்­துக்கு பெரும் சக்­தி­யாகும் என அமைச்­சரும் முன்­னணி ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­மான சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.

அனு­ரா­த­புரம் மாவட்ட முன்னாள் பிரதி அமைச்சர் டபிள்யூ.பி. ஏக்­க­நா­யக்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி கேகாலை மாவட்ட முன்னாள் அமைச்சர் அதா­வுத சென­வி­ரத்ன ஆகியோர் ஐக்­கிய தேசிய கட்சி ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவை சந்­தித்து அவ­ருக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக தெரி­வித்து அவ­ருடன் இணைந்­து­கொண்­டுள்­ளனர்.

அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் இல்­லத்தில் நேற்று இ்டம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் அவர்கள் இரு­வரும் கலந்­து­கொண்டு தங்­க­ளது ஆத­ரவை வழங்­கு­வ­தாக அறி­வித்­தனர். அத­னைத்­தொ­டர்ந்தே அமைச்சர் சஜித் பிரே­ம­தாச இவ்­வாறு குறிப்­பிட்டார்.

 அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

டபிள்யூ.பி. ஏக்­க­நா­யக்க ஐக்­கிய தேசிய கட்­சியில் இருந்து சாதா­ரண மக்­களில் இருந்து அர­சி­யலை மேற்­கொண்­டவர். பிற்­கா­லத்தில் கட்­சிக்குள் ஏற்­பட்ட கருத்து வேறு­பா­டு­களால் வேறு திசைக்கு சென்­றி­ருந்தார். என்­றாலும் அவர் தற்­போது மீண்டும் தாய் வீட்­டுக்கு வந்து எம்­முடன் இணைந்­து­கொண்­டி­ருப்­பது எமக்கு பெரும் சக்­தி­யாகும்.

அதே­போன்று இட­து­சாரி கொள்­கையில் பாரிய சக்­தி­யாக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் அதா­வுத சென­வி­ரத்ன எப்­போதும் சாதா­ரண மக்­க­ளுடன் இணைந்தே அவர் அர­சியல் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்தார். என்­மீது நம்­பிக்கை வைத்து இவர்கள் தற்­போது எங்­க­ளுடன் கைகோர்த்­தி­ருப்­பது எமக்கு பெரும் சக்­தி­யாகும்.

முன்­னோடி அர­சியல் இயக்­கத்­தைச்­சேர்ந்த பல கட்­சிகள் எனது பய­ணத்­துக்கு ஆத­ர­வ­ளிக்க எம்­முடன் இணைந்­து­கொண்­டி­ருக்­கின்­றன என்றார்.

இதன்­போது அதா­வுத சென­வி­ரத்ன தெரி­விக்­கையில்,  கடந்த 10 வரு­டங்­க­ளாக அர­சியல் வாதிகள் ஊழல் மோசடி தொடர்­பாக கதைத்னர். என்­றாலும் அமைச்­சர்­களின் செயற்­பாட்­டினால் பாரா­ளு­மன்றம் தொடர்பில் மக்கள் விரக்­தி­ய­டைந்­தி­ருக்­கின்­றனர். அவ்­வா­றான அர­சியல் வாதி அல்­லாத ஒரு­வரை நாட்­டுக்கு தெரி­வு­செய்­ய­வேண்­டிய தேவை இருக்­கின்­றது. அதற்­கா­கவே முன்­னோடி அர­சியல் இயக்­க­மாக பல கட்­சிகள் இணைந்து செயற்­பட்டு வரு­கின்றோம்.

தற்­போ­துள்ள நிலையில் எந்த கட்­சிக்கு நாங்கள் ஆத­ர­வ­ளிப்­ப­தென ஆராய்ந்து பார்த்­த­போது  இரண்டு தரப்­பிலும் குறைப்­பா­டுகள் இருக்­கின்­றன. அதனால் குறைந்­த­ள­வி­லான பாதிப்பும் கூடு­த­லான நன்­மையும்  நாட்­டுக்கு ஏற்­ப­டு­கின்ற வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வ­ளிக்க நாங்கள் தீர்­மா­னித்­தி­ருக்­கின்றோம். மொட்டு கட்­சியில் பாரி­ய­ளவில் மோச­டி­யுடன் தொடர்ப்பு பட்­ட­வர்கள் இருக்­கின்­றனர்.  இந்த பக்­கத்­திலும் மத்­திய வங்கி மோசடி குற்­றத்­துக்கு ஆளா­ன­வர்­களும் இருக்­கின்­றனர்.

அதனால் நாட்டில் ஊழல் மோச­டியை கட்­டுப்­ப­டுத்­திக்­கொண்டால் ஏற்­ப­டு­கின்ற செலவில் 40வீதத்தை மீதப்­ப­டுத்­திக்­கொள்­ளலாம். அதனை சஜித் பிரே­ம­தாச மேற்­கொள்­ள­வேண்டும். அத்­துடன் எதி­ர­ணிக்கு நாங்கள் ஆத­ர­வ­ளித்தால் பாரிய பிரச்­சினை நாட்­டுக்கு ஏற்­படும் என்ற நம்­பிக்கை எமக்­கி­ருக்­கின்­றது. அவ்­வா­றான  பிரச்­சினை ஏற்­பட்­டாலும் சாதா­ரண அளவே ஏற்­படும் என்ற நம்­பிக்­கை­யிலே சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ர­வ­ளிக்க முன்வந்தோம் என்றார்.

இதன்போது டபிள்யூ.பி. ஏக்கநாயக்க தெரிவிக்கையில்,

மக்களுக்கு சேவை செய்வதாக தெரிவித்தே அரசியலுக்கு வருகின்றனர். ஆனால் வந்த பின்னர் அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நிலையை மாற்ற பொருத்தமானவர் சஜித் பிரேமதாச என்பதை உணர்ந்துகொண்டே அவருக்கு ஆதரவளிக்க முன்வந்தோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21