ரோகித் - அகர்வாலின் வலுவான ஆதிக்கம் ; திண்டாடும் தென்னாபிரிக்கா

Published By: Vishnu

03 Oct, 2019 | 11:15 AM
image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வாவலின் வலுவான இணைப்பாட்டத்தினால் இந்திய அணி 317 ஓட்டங்களை குவித்துள்ளது.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 இருபதுக்கு -20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் இருபதுக்கு - 20 தொடர் ஏற்கனவே சமனிலையில் முடிய, இவ்விரு அணிகளுக்கிடையேயான முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டி நேற்றைய தினம் விசாகப்பட்டிணத்தில் ஆரம்பமாகியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதல் முறையாக தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 154 பந்துகளை எதிர்கொண்டு தனது சதத்தை பூர்த்தி செய்தார். ரோகித் சர்மாவுடன் களம் இறங்கிய மற்றொரு தொடக்க வீரரான மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். 

59.1 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. மழை தொடர்ந்தால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக நடுவர்கள் அறிவித்தனர். 

அப்போது விக்கெட் இழப்பின்றி ரோகித் சர்மாவும் மயங்க் அகர்வாலும் களத்தில் இருந்தனர். 

அதைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இதில் மயங்க் அகர்வால் 204 பந்துகளில் 13 நான்கு ஓட்மட், 2 ஆறு ஓட்ட உதவியுடன் சதமடித்தார். 

இதையடுத்து இந்திய அணி சற்று நேரத்துக்கு முன்னர் 82 ஓவர் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 317 ஓட்டங்களை குவித்துள்ளது.

ரோகித் சர்மா 176 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, அகர்வால் 137 ஓட்டத்துடனும், புஜாரா எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35