“எழுச்சி பெறும் பொலன்னறுவை” செயற்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் ஜனாதிபதியினால் திறப்பு

Published By: Daya

03 Oct, 2019 | 10:11 AM
image

“எழுச்சி பெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் பொலன்னறுவையில் உள்ள சில பாடசாலைகளிலும் விகாரைகளிலும் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளை நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்து வைத்தார். 

“எழுச்சி பெறும் பொலன்னறுவை” வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்குத் தரமான கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் 55 இலட்ச ரூபா செலவில் குமுதுபுற ஆரம்ப பாடசாலை யில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத் தொகுதியை நேற்று முற்பகல் ஜனாதிபதி மாணவர் களிடம் கையளித்தார். 

வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மாணவர்கள் மிகுந்த அன்புடன் வரவேற்றனர். வகுப்பறை கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்த ஜனாதிபதி மாணவர்களது கற்றல் நடவடிக்கைகளைப் பார்வையிட்டார். 

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்தல், நூலகங்களுக்கான புத்தக பொதிகளை வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் இதன்போது இடம்பெற்றதுடன், மாகாண மக்கள் பிரதிநிதிகளும் பாடசாலை அதிபர் கே.ஜி.டப்ளியு.அபேசுந்தர, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

இதனிடையே “எழுச்சி பெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 56 இலட்ச ரூபா செலவில் ஹிங்குரக்கொட, பகல அம்பகஸ்வெவ ஸ்ரீ ராகுல் கனிஷ்ட வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத் தொகுதியையும் ஜனாதிபதி இன்று மாணவர்களிடம் கையளித்தார். 

“எழுச்சி பெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் சமய மறுமலர்ச் சியை நோக்காகக் கொண்டு 28 இலட்ச ரூபா செலவில் மெதிரிகிரிய ஸ்ரீ ஜயபிம்பாராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய அறநெறிப் பாடசாலைக் கட்டடத்தையும் ஜனாதிபதி இன்று மாணவர்களிடம் கையளித்தார். 

இன்று நண்பகல் விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, சமய அனுஷ்டானங்களில்  ஈடுபட்டதுடன், மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் வழங்கினர். 

இதன் பின்னர் நினைவுப் பலகையைத் திறந்து வைத்து அறநெறிப் பாடசாலைக் கட்டடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி அதனைப் பார்வையிட்டார். 

மெதரிகிரிய பிரதேசத்தில் வசிக்கும் சிறுவனான திலான் மதுசங்கவின் சத்திர சிகிச்சைக்குத் தேவையான 05 இலட்ச ரூபா நிதியுதவியையும் ஜனாதிபதி இதன்போது வழங்கினார். 

மெதிரிகிரிய ஸ்ரீ ஜயபிம்பாராம விகாரையின் விகாராதிபதி வண. மேதகம சோமாநந்த நாயக்க தேரர் உள்ளிட்ட பிரதேசத்தின் மகாசங்கத்தினரும் வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர். 

அத்துடன், மெதிரிகிரிய ஸ்ரீ விஜயாராம விகாரையில் 35 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப் பட்டுள்ள தர்ம போதனை மண்டபமும் இன்று ஜனாதிபதியின் தலைமையில் திறந்துவைக்கப் பட்டது. 

விகாராதிபதி வண. மகாசென்கம தம்மரத்தன நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் இந்நிகழ் வில் பங்குபற்றினர். 

அதனைத் தொடர்ந்து மெதரிகிரிய புதிய நகரிலுள்ள சரஸ்வதி தேவி பிரிவெனாவில் 74 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அன்னதான மண்டபத்துடன் கூடிய பிக்குகள் தங்குமிடத்தை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இன்று கலந்துகொண்டார். 

கிழக்கு, தமன்கடுவ பிரதேச பிரதான சங்க நாயக்கர் வண. மினுவன்கமுவே குணரத்தன தேரர், தியபெதும எலகிம்புலாவல ஸ்ரீ சுச்சரித்த வர்தனாராமாதிபதி ராமஞ்ஞ மகா நிக்காய பிரிவின் வண. எருன்கடே வினயாலங்கார தேரர் விகாராதிபதி வண. தேவவகுகே விஜயதம்ம தேரர் உள்ளிட்ட பிரதேசத்தின் மகாசங்கத்தினர் இதன்போது பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் வழங்கினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56