காசோலை மோசடி வழக்கில் எதிராளியை மிரட்டிய முறைப்பாட்டாளர் - நீதவான் கடும் எச்சரிக்கை

Published By: Daya

03 Oct, 2019 | 09:13 AM
image

யாழ்.நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் காசோலை மோசடி வழக்கில் எதிராளியை பொய் சாட்சியம் வழங்க வற்புறுத்தி மிரட்டிய முறைப்பாட்டளரை யாழ்.நீதவான் கடுமையாக எச்சரித்தார்.

யாழ்.நீதவான் நீதிமன்றில் காசோலை மோசடி வழக்கொன்று நடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கின் கடந்த தவணை விசாரணைகள் முடிவடைந்து வழக்குடன் தொடர்புடையவர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வந்த போது , வழக்கின் முறைப்பாட்டாளர் மூன்றாம் எதிரியிடம் தனிப்பட்ட ரீதியில் அணுகி தமக்குச் சாதகமாகப் பொய்ச் சாட்சியம் அளிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு எதிராளி மறுப்பு தெரிவித்துச் சென்றிருந்தார்.

பின்னர் , அன்றைய தினம் மாலை கொக்குவில் பகுதியில் குறித்த மூன்றாம் எதிராளி தனது முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை முறைப்பாட்டாளரின் சகாக்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அவரை வழிமறித்து மிரட்டி முறைப்பாட்டாளருக்கு சாதகமாகப் பொய்ச் சாட்சியம் அளிக்குமாறு மிரட்டிச் சென்றனர்.

குறித்த மிரட்டல் சம்பவம் தொடர்பில் மூன்றாம் எதிராளி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , எதிராளியின் சட்டத்தரணி, தமது கட்சிக்காரர் மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதவானின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

அதனை அடுத்து நீதவான் முறைப்பாட்டாளரிடம் இவ்வாறான செயற்பாடுகளில் இனி ஈடுபடக் கூடாது எனக் கடுமையாக எச்சரித்ததுடன் , இனி அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டால் வழக்கு நிறைவடையும் வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படுவீர் எனக் கடுமையாக எச்சரித்தார். 

அதனைத் தொடர்ந்து வழக்கை திகதியிட்டு ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08