தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக மஸ்கெலியா பகுதி தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

02 Oct, 2019 | 06:51 PM
image

தோட்டங்கள் காடாகி காட்சியளிக்கின்றது. தொழிற்சாலை ஒழுங்கான முறையில் இயங்குவதில்லை. சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிக்கும் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை. இவ்வாறான பல்வேறு குறைபாடுகளை முன்வைத்து சாமிமலை ஸ்டொக்கம் தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்டத்தின் நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இன்று மதியம் இந்த ஆர்ப்பாட்டம் ஸ்டொக்கம் தோட்டத்தின் தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றது. இதில் அத்தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

போராட்டத்தில் தொழிலாளர்கள் அத்தோட்ட நிர்வாகத்தினால் கவனிக்கப்படாத பல்வேறு விடயங்களை வாசகங்கள் எழுதிய பதாதைகள் ஊடாக வெளிகொண்டு வந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மறுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இதேவேளை தோட்டத்தின் தேயிலை மலைகள் காடாக்கப்பட்டிருப்பதால் தோட்ட நிர்வாகம் பணிக்கும் தேயிலை இறாத்தலை பெறமுடியாது சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், வருமான ரீதியில் தாம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

அத்தோடு தோட்டத் தொழிலாளர்களுடைய மருத்துவம், இலவச வாகன போக்குவரத்து, கர்ப்பிணி தாய்தார்களுக்கான சலுகைகள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி உதவிகள் போன்றவற்றை இம்மக்களுக்கு வழங்காது புறக்கணித்து வருவதாகவும் அம்மக்கள் சுட்டிக்காட்டினர்.

சுகாதாரம் மற்றும் அடிப்படை பிரச்சினைக்கு ஆளாகி உள்ள நிலையில் தோட்ட நிர்வாகத்திடம் இது குறித்து வழங்கப்பட்ட கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது செயல்பட்டு வருவதால் இவைகளை உடனடியாக தோட்ட நிர்வாகம் பெற்றுத்தர வேண்டும் எனவும், தொழில் ரீதியில் முன்னேற்றமடைய ஸ்டொக்கம் தோட்ட மலைகளை துப்பரவு செய்து அட்டைக்கடி மற்றும் காட்டு மிருகங்களின் தொல்லையில் இருந்து தோட்ட நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் என வழியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33