அரசியல் தீர்வுகள் கிடைக்காமை கவலைக்குரியது ; பிரித்தானிய விசேட பிரதிநிதியிடம் சம்பந்தன் தெரிவிப்பு

Published By: Vishnu

02 Oct, 2019 | 05:27 PM
image

(ஆர்.யசி)

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நீண்ட காலம் கடந்தும் இன்னமும் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வுகள் கிடைக்காதுள்ளமை கவலைக்குரிய விடயம் என்பதை கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பொதுநலவாயம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தெற்காசியாவிற்கான அமைச்சரும், முரண்பாடுகள் உள்ள இடங்களில் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்குமான பிரதமரின் விசேட பிரதிநிதியுமான  தாரிக் அஹமத்திடம் எடுத்துக்கூறியுள்ளார். 

இலங்கை அரசாங்கம் தமது பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் வகையில்  செயற்பட  இரு  நாடுகளிற்குமிடையிலான உறவின் அடிப்படையிலான செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஆர்வத்துடன் ஈடுபடுவதாக  தாரிக் அஹமத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார். 

ஐக்கிய இராஜ்ஜியத்தின் பொதுநலவாயம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தெற்காசியாவிற்கான அமைச்சரும், முரண்பாடுகள் உள்ள இடங்களில் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்குமான பிரதமரின் விசேட பிரதிநிதியுமான  தாரிக் அஹமத்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும்  கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம் ஏ. சுமந்திரன் ஆகியோரை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் தேசிய பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன், தமிழ் மக்களாகிய நாம் எமக்கென ஒரு வரலாற்றையும் கலாச்சாரத்தையும் கொண்டவர்கள். நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான ஒரு அரசியல் அதிகாரபரவலாக்கத்தின் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு தயாராக உள்ளோம், நாங்கள் பிரிபடாத பிரிக்கமுடியாத ஒன்றிணைந்த இலங்கை நாட்டிற்குள் தீர்வொன்றினையே வேண்டுகிறோம்.  நாங்கள் அனைவரும் இந்த நாடு செழிப்புற வேண்டுமென்றே விரும்புகிறோம், மேலும், கடந்த 30 வருட காலமாக இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பில் விளக்கிய அதேவேளை இது வரையிலும் எவ்வித தீர்க்கமான முடிவுகளும் எட்டப்படாமை குறித்து தனது கவலையை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02