தன்னுடன் எந்த ஊழல்வாதிகளும் இல்லையென சஜித் தெரிவித்தமை நகைப்பிற்குரியது - எஸ்.பி.திஸாநாயக்க 

Published By: Daya

02 Oct, 2019 | 05:50 PM
image

ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் சஜித் பிரேமதாஸவின் கல்வித்தகைமை தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை இதுவே மிகப்பெரிய மோசடியாகும் என எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சஜித் பிரேமதாஸ ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தன்னோடு எந்தவொரு ஊழல்வாதிகளும் இல்லை எனத்  தெரிவித்துள்ளார். 

அவர் முதலில் கண்ணாடியில் சென்று பார்க்க வேண்டும். அப்போதுதான் யார் முதன்மையான ஊழல் பேர்வழி என்பதை அவர் கண்டுகொள்வார். நான் அவ்வாறு கூறுவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. 

ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் சஜித் பிரேமதாஸவின் கல்வித்தகைமை குறித்துக் கேள்வி எழுப்பியதற்கு இன்னமும் சஜித் பிரேமதாஸ தனது கல்வித்தகைமை தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை. இதுவே மிகப்பெரிய மோசடியாகும்.

அதேபோன்று அவர் தனது அமைச்சின் கீழ் இடம்பெறும் வீடமைப்புக்காக செலவழிக்கின்ற நிதியின் அரைவாசியையோ அல்லது அதற்கும் அதிகமான நிதியையோ மாதிரிக்கிராமத்தை திறந்துவைக்கும் நிகழ்வு மற்றும் வீடுகளைக் கையளிக்கும் நிகழ்விற்காகவும், அதனை விளம்பரம் செய்வதற்காகவும் செலவு செய்வார். இது மிகப்பெரிய ஊழல் என்றே குறிப்பிட வேண்டும்.

அடுத்ததாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்ப்பை மீறியே மத்திய கலாச்சார நிதியத்தை நிர்வகிக்கும் பொறுப்பு சஜித் பிரேமதாஸவிற்கு வழங்கப்பட்டது. அந்த நிதி நாட்டின் புராதன மரபுரிமைகள், கலாச்சார சின்னங்களைப் பாதுகாப்பதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் சஜித் பிரேமதாஸ தனிப்பட்ட அரசியல் ஆதாயத்தைப் பெறும் நோக்கில் விகாரைகள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளுக்கு அந்த நிதியிலிருந்து உதவிகளை வழங்கினார். 

கலாச்சார நிதியத்தைப் பயன்படுத்த வேண்டிய வரையறைகளின் பிரகாரம் இது தவறானதொன்றாகும். மேலும் மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்ட அர்ஜுன மகேந்திரனும் சஜித் பிரேமதாஸ அமைச்சராகப் பதவி வகித்த இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர் தான். பல்வேறு ஊழல் மோசடிகளில் தொடர்புபட்ட ரிஷாட் பதியுதீனும் தற்போது சஜித்திற்கு தான் ஆதரவு வழங்குகின்றார். மலிக் சமரவிக்ரம, ரவி கருணா நாயக்க போன்ற கைதேர்ந்த ஊழல்வாதிகளை எல்லாம் தன்பக்கம் வைத்துக்கொண்டு, 'இங்கு ஊழல் பேர்வழிகள் இல்லை' என்று கூறுவது நகைப்பிற்குரிய விடயமாகும் எனத் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில்...

2024-03-29 15:37:15
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37