ஐ.தே.க -  சு.கவின் கொள்கை ரீதியான முரண்பாட்டை  ஜனாதிபதி செயல் வடிவில் வெளிப்படுத்த வேண்டும் :  டலஸ் 

Published By: R. Kalaichelvan

02 Oct, 2019 | 03:08 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுடனான சுதந்திர கட்சிக்கு  என்றும் இணக்கப்பாடுடன் பயணிக்க முடியாது.

இதனை ஜனாதிபதி பேச்சளவில் குறிப்பிட்டதை  செயல் வடிவில் வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பரந்துப்பட்ட கூட்டணி குறித்து இன்றும், நாளையும் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகள் சுதந்திர கட்சியுடன் பாதகமற்ற சூழலை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

வியத்மக அமைப்பின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 நிறைவுப் பெற்றுள்ள சிறுவர் தினத்தை முன்னிட்டு  நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ள விடயம் சிறுவர்கள் மீதான வன்கொடுமையினை வெளிப்படுத்தியுள்ளது. 

சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் இதுவரையிலான காலப்பகுதியில் நிலுவையில் உள்ளது. சிறுவர்களின் ஆண் பாலினத்தவர்களே அதிகளவில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். சிறுவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இன்றைய நிலையில் அனைவருக்கும் காணப்படுகின்து.

பிரதமர்  மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோரது சூழ்ச்சியாகவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்குகள் காணப்படுகின்றன. 

அமெரிக்க குடியுரிமையினை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்  உண்மைக்கு புறம்பானது என்று  இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்க குடியுரிமையினை பெற்றதை தொடர்ந்தே கோத்தாபய ராஜபக்ஷ 2005ம் ஆண்டு  பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படுகின்றார். அவ்வாறாயின் இரட்டை குடியுரிமையினை வைத்துக் கொண்டு  மேற்கொண்ட பாதுகாப்புசார் நடவடிக்கைகள் அனைத்தும்  சட்டத்திற்கு முரணானவை என்ற நிலைப்பாட்டை  ஏற்படுத்தவே அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் பக்கச்சார்பாக செயற்படுகின்றார்கள்.

எமது நாட்டின் ஜனநாயகம், சுயாதீனம் தொடர்பில் கருத்துரைத்து அதிக அக்கறை கொள்ளும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் எதுவும் நல்லாட்சி அரசாங்கத்தில் இடம் பெற்ற முறைகேடுகள், தேசிய நிதி மோசடி, ஜனநாயக மீறள் உள்ளிட்ட செயற்பர்டுகளின் போது முன்வரவில்லை. அரச சார்பற்ற தொண்டு நிறுவனகங்கள் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் தேவைகளை நிறைவேற்றும் முகவர் நிறுவனங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கூட்டணி அமைத்தல் கொள்கை அடிப்படையிலும், அரசியலமைப்பு உருவாக்க ரீதியிலும் ஒருமித்ததாக காணப்படுகின்றது.  சின்னத்தை முன்னிலைப்படுத்திய பிரச்சினைகள் மாத்திரமே தற்போது காணப்படுகின்றது என இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58