மைத்­தி­ரி - சஜித்தை சந்­தித்து பேச்­சு­ நடத்த ஏற்­பாடு

Published By: J.G.Stephan

02 Oct, 2019 | 12:03 PM
image

(ஆர்.யசி)
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கும் இடையில் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்தை ஒன்­றினை முன்­னெ­டுக்க முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக அர­சியல் வட்­டா­ரங்­களில் அறிய முடி­கின்­றது. ஐக்­கிய தேசிய கட்­சி­யினால் விடுக்­கப்­பட்ட அழைப்­புக்கு அமைய இந்த பேச்­சு­வார்த்தை முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது.

ஐக்­கிய தேசிய கட்சி பல­மான கூட்­ட­ணி­யாக தேர்­தலை சந்­திக்க தயா­ராகி வரு­கின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்க  முயற்­சி­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது.



ஐக்­கிய தேசிய கட்­சியின் செய­லாளர் அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செய­லாளர் தயா­சிறி ஜெய­சே­கர எம்.பி.க்கு விடுத்த அழைப்பின் பெயரில் சந்­திப்­பொன்றை    நடத்த முயற்­சிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அந்த வகையில் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இடையில் இந்த சந்­திப்பு நடக்­க­வுள்­ள­தாக அர­சியல் வட்­டா­ரங்­களின் மூல­மாக அறிந்­து­கொள்ள முடி­கின்­றது.

நேற்­றைய தினம் இந்த சந்­திப்பை நடத்த இரண்டு தரப்­பி­னரும் முயற்­சி­களை எடுத்த போதிலும் அவ்­வா­றான சந்­திப்­பொன்றை நடத்த முடி­யாமல் போயுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. நேற்­றைய தினம் இரவு 7.30 மணி­ய­ளவில் இரு­வரும் சந்­திக்க இருந்­த­தாக ஐக்­கிய தேசிய கட்­சியின் தரப்­பினர் உறு­திப்­ப­டுத்­தினர்.

ஆனால் குறித்த நேரத்தில் ஜனா­தி­பதி தலை­மையில் பாது­காப்பு குழுக் கூட்டம் இடம்­பெற்ற கார­ணத்­தினால் இரு­வ­ருக்கும் இடையில் சந்­திப்­பொன்று இடம்­பெ­ற­வில்லை. எனி னும் இன்று அல்­லது நாளை இந்த சந்­திப்பை நடத்த முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­வ­தா­கவும் அறிந்­து­கொள்ள முடி­கின்­றது.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் கோரிக்­கைகள் குறித்து ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் நிலைப்­பாட்டில் உள்ள முரண்­பா­டுகள் மற்றும் நிரா­க­ரிப்­பு­களை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சில மாற்று நகர் வுகளை கையாள முயற்சிக்கின்றது.

இந்நிலையில் ஜனாதிபதிக்கும் சஜித் பிரேம தாசவுக்கும் இடையில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50