நாட்டில் இன்றும் கனமழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின்  பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார். 

காங்கேசன் துறைக்கு வடக்கே  500 கிலோ மீற்றர்  தொலைவில்  பலத்த காற்று வீசிவருகின்றது. இன்னும் 24 மணி நேரத்தில் அது சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ளது.

இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.

மேலும் மத்திய மற்றும் வடபகுதிகள் பெரிதும் பாதிக்ககப்படுமென அவர் தெரிவித்தார்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் பாரிய அலைகள் தோன்றக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதால் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.