ஞானசாரதேரருக்கு நாவடக்கம் வேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன்

Published By: R. Kalaichelvan

02 Oct, 2019 | 10:33 AM
image

இலங்கை சிங்­கள பௌத்­த ­நாடு. இதை­ஏற்­ப­வர்கள் இந்­த­நாட்டில் இருக்­கலாம். ஏனையோர் தங்­க­ள­து­ உ­டமை­க­ளுடன் வெளி­யே­றலாம் என்று பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொடே அத்தே ஞான­சா­ர­தேரர் கருத்து வெளி­யிட்­டுள்ளார். அவ­ரது கருத்­தா­னது இனங்­க­ளுக்­கி­டையில் குரோ­தத்­தையும் வன்­மு­றை­யையும் தூண்­டு­வ­தாக அமைந்­துள்­ளது என்று ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.

தேரரின் கருத்து குறித்து  ஈபி.ஆர்.எல்.எவ்.வின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

இலங்­கையின் அர­சியல் சாச­னத்தின் பிர­காரம் இத்­தீ­வா­னது ஜன­நா­ய­க­ சோ­ச­லி­ச­ குடி­ய­ர­சாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளது. இது சிங்­கள பௌத்த நாடு என்று எந்­த­வொரு­ சட்­டத்­திலும் குறிப்­பி­டப்­பட­வில்லை என்­பதை சிங்­கள பௌத்த இன­வா­தத்­துக்குள் புதைந்­து­கி­டக்கும் ஞான­சா­ர­தேரர் போன்ற பிக்­கு­களும் அவர்­களின் வாரி­சுகளும் புரிந்­து­கொள்ள வேண்டும்.

இலங்கை என்­பது பல­மொழி, பல­மத,பல இனங்­களைக் கொண்ட நாடு என்றும் வடக்கு, -­கி­ழக்கு என்­ப­து ­தமிழ் பேசும் மக்­களின் வர­லாறு பூர்­வ­மான வாழ்­விடம் என்றும் 1987ஆம் ஆண்­டு­ செய்து­கொள்­ளப்­பட்­டுள்ள இந்­தி­ய-­ –இ­லங்கை ஒப்­பந்­தத்தின் முத­லா­வது வாச­கத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதனை இந்­தியப் பிர­தமர் ராஜீவ்­காந்­தியும் இலங்கை ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­னவும் ஏற்­றுக்­கொண்டு கையொப்­ப­மிட்­டுள்­ளனர். ஆகவே இலங்கை என்­பது ஒரு சிங்­கள பௌத்த நாடென்­ற ­ஞா­ன­சா­ர­தே­ரரின் திமிர்த்­த­ன­மான கருத்தும் அத­னை­ ஏற்­றுக்­கொள்­ளா­த­வர்கள் வெளி­யே­றலாம் என்னும் அடாவடித்­த­ன­மா­ன­ க­ருத்தும் மிக­ மி­க ­வன்­மை­யாகக் கண்­டிக்­கத்­தக்­கது.

விஜயன் இந்­த­நாட்­டுக்கு வந்­த­பொ­ழுது இந்­த ­நாட்டில் தொன்­ம­மான ஒரு நாக­ரிகம் இருந்­த­தென்­பதும், இந்­த­ நாட்டில் இயக்கர், நாகர் என்னும் இனக் குழு­மங்கள் இருந்­த­தா­கவும் தீவின் நான்கு பகு­தி­க­ளிலும் சிவா­ல­யங்கள் இருந்­த­தா­கவும் சிங்­கள வர­லாற்­றா­சி­ரி­யர்கள் கூறு­கின்­றனர். அசோகச் சக்­க­ர­வர்த்­தியின் காலத்தில் அவ­ரது மக­ளான சங்கமித்­தி­ரையின் மூல­மா­கவே இலங்­கைக்கு பௌத்தம் கொண்­டு­வ­ரப்­பட்டது. அவ்­வா­றான பௌத்தம் வரு­வதற்கு முன்னர், இங்கு சிவா­ல­யங்கள் தான் இருந்தன என்­பது வர­லாற்­றா­சி­ரி­யர்­களும் ஆய்­வா­ளர்­களும் ஏற்றுக் கொண்­ட ­உண்மை.

அதேபோல் சிங்­க­ள­மொழி என்­பது ஆறாம் நூற்­றாண்டு காலத்­தி­லேயே தோற்றம் பெற்­றது. அதன் பின்­னரே தமிழ், பாலி, சமஸ்­கி­ருதம் ஆகி­ய­வற்றின் துணை­யுடன் சிங்­க­ள ­மொழி செழு­மைப்­ப­டுத்­தப்­பட்­டது. இவை­ யாவும் வர­லாறு.

இரா­வ­ண­ப­லய என்ற ஒரு அமைப்பு சிங்­கள பௌத்த தீவி­ர­வா­தி­களால் தோற்று­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்தப் பெயரில் இருக்கும் இரா­வணன் யார்? இலங்­கா­புரியின் மன்­ன­னாக இருந்த இரா­வணன் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இராமா­யணம் நடந்­த ­கா­ல­கட்டம் என்­பது ஏறத்­தாழ பத்­தா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­ட­காலம் என ஆய்­வா­ளர்கள் கண்­ட­றிந்­துள்­ளனர். அவ்­வா­றி­ருக்­கு­மாக இருந்தால் சிவ­பக்­த­னான இரா­வ­ணனின் கால­கட்­டமும் பத்­தா­யிரம் ஆண்­டு­க­ளுக்­கு­ முற்­பட்­ட­தா­கவே இருக்க­மு­டியும். எனவே, விஜயன் வரு­வ­தற்கு முன்பும், பௌத்தம் வரு­வ­தற்கு முன்பும் சிங்­கள மொழி தோன்­று­வ­தற்கு முன்பும் இங்கு சிவ­பக்­தர்கள் இருந்­தார்கள் என்­பதும் சைவ­ ச­ம­யத்தைச் சார்ந்­த­வர்கள் இருந்­தார்கள் என்­பதும் வெளிப்­ப­டை­யா­னது.

பிரித்தா­னி­யர் இந்­த­ நாட்­டுக்­கு ­வந்­த­ போதும் கூட, கண்­டி இ­ராச்சி­யத்தின் நீதி­மன்­ற ­மொ­ழி­யாக தமிழே இருந்­த­தென்னும் வர­லாற்­றை நாம் பார்க்­கின்­ற­போது இந்­நாட்டின் வர­லாற்று பூர்­வ­மான ­பூர்­வீ­கக்­கு­டிகள் தமி­ழர்­களே என்­ப­து ­நி­தர்­ச­ன­மா­னது.

இவ்­வா­றான சூழ்­நி­லையில், தமி­ழர்­களையோ, தமிழ் பேசும் ஏனைய இனத்­த­வரையோ இந் ­நாட்­டை ­விட்­டு வெளி யேறும்­படி கூறு­வ­தையும், சிங்­க­ளத்தை படிக்கச் சொல்­லி­க் கர்­ச்சிப்­பதும் அறி­வி­லித்­த­ன­மா­ன­தாகும். பெரும்­பான்மை சமூ­கத்து மதப்­பி­ர­மு­கர்கள் என்ற அடிப்­ப­டையில், சிறு­பான்­மை­ மக்­களை அடக்­கி­யா­ளலாம், சிறு­பான்மை மதங்­களை அழித்­தொ­ழிக்­கலாம் என்ற இழி­வான சிந்­தனை இனி­மேலும் சிங்­கள பௌத்­த­ மே­லா­திக்க வாதிக­ளிடம் இருக்­கக்­கூ­டாது.

ஞான­சா­ர­தேரர் அண்­மையில் முல்­லைத்­தீ­வுக்குச் சென்­றி­ருந்தார் என்­பதும், அங்கு நீதி­மன்றக் கட்­ட­ளையைப் புறக்­க­ணித்து நீரா­வி­யடி பிள்­ளையார் கோயிலில் பலாத்­கார­மாக உட்­கார்ந்­தி­ருந்த பௌத்­த ­பிக்­குவின் உடலை அக்­கோயிலுக்­கு அருகா­மை­யி­லேயே தகனம் செய்­வ­தற்கு முன்­னின்­று­ செ­யற்­பட்டார் என்­பதும் அண்­மைய செய்­திகள்.

முல்­லைத்­தீ­வுக்குப் போனதும் தமக்கு தமி­ழ­கத்­துக்குப் போன­தான ஒரு­ மன உணர்வு ஏற்­பட்­ட­தாக ஞான­சா­ர­தேரர் அங்­க­லாய்த்­தி­ருக்­கின்றார். ஞான­சா­ர­தேரர் ஒரு­ வி­ட­யத்தைப் புரிந்­து­கொள்­ள­வேண்டும். வடக்­கு-­, கி­ழக்­கு­ மா­கா­ணங்­களின் எட்டு மாவட்­டங்­க­ளிலும் தமிழ் பேசும் ­மக்­களே பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்­றனர் என்­ப­தையும் சிங்­கள பௌத்­த ­மக்கள் என்­ப­வர்கள் சிறிய அள­வி­லேயே வாழ்­கி­றார்கள் என்­ப­தையும் இலங்­கையின் குடி­சன புள்ளி­வி­ப­ரங்­க­ளி­லி­ருந்து அறிந்­து­கொள்­ள­முடியும். இவ்­வா­றான ஒரு சூழ்­நி­லையில் இனங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வு, நல்­லி­ணக்கம் ஏற்­ப­ட ­வேண்­டு­மாக இருந்தால் இவற்றைப் புரிந்­து­கொண்டு கருத்­துக்­களை வெளி­யி­டு­வதே சிறப்­பாக இருக்கும்.

ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்­கு­கிற ஒரு ­கா­ல­கட்­டத்தில், ஞான­சார தேரர் வெளி­யிட்­டி­ருக்கும் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு­ எ­தி­ரா­ன­ காட்­ட­மான கருத்­துக்கள் என்பது, சிங்­கள பௌத்­த­வாக்­கு­களை ஒரு­ கட்­சியை­ நோக்கிக் குவிப்­பதை நோக்­க­மாகக் கொண்டு, தேர்தல் கால­கட்­டத்தில் ஒரு­பதற்ற­மா­னதும் தமி­ழன விரோ­த­மா­ன­து­மான­ ஒரு சூழ்­நி­லையை உரு­வாக்க நினைக்­கி­றாரோ என்று சிந்­திக்கத் தூண்­டு­கி­றது.

ஏற்­க­னவே நீதி­மன்­றத்­தை­ அ­வ­ம­தித்­ததன் கார­ண­மாக சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டு ­பின்னர் ஜனா­தி­ப­தியால் பொது­ மன்னிப்பு வழங்­கி­ வி­டு­விக்­கப்­பட்­ட­வர்தான் இந்­த ­ஞா­ன­சா­ர­தேரர். ஆனால் மீண்டும் நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­து­ நீ­தி­மன்றக் கட்­ட­ளையை மீறி­ செ­யற்­பட்­டுக்­கொண்­டி­ருப்­ப­வர்தான் இந்­த­ பௌத்­த ­பிக்கு. எனவே, மற்­ற­வர்­க­ளுக்­கு­ அ­றி­வுரை கூறு­வ­தற்கோ அல்­ல­து­ மே­லா­திக்க சிந்­த­னை­யி­லி­ருந்து ஏனை­யோ­ருக்கு உத்­த­ரவு­ போ­டுவ­தற்கோ ஞான­சா­ர­தே­ர­ருக்கும் அவ­ரது வாரி­சு­க­ளுக்கும் எத்­த­கைய அரு­க­தை­யு­மில்லை என்­பதை சிங்­கள பௌத்த மேலா­திக்­க ­வா­திகள் புரிந்­து­கொள்­ள­வேண்டும்.

நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­ததன் கார­ண­மாக தண்­ட­னை­ பெற்­று­ சி­றை­வாசம் அனு­ப­வித்த ஞான­சா­ர­தேரர், மீண்டும் ஒரு­ முறை அவ்­வா­றா­ன­ நீ­தி­மன்ற அவ­ம­திப்­புக்­களில் ஈடு­ப­ட­மாட்டார் என்­ப­தாலும் இனங்­க­ளுக்­கி­டையில் குரோ­த­ உ­ணர்­வு­க­ளை­ வ­ளர்க்­க­மாட்டார் என்­ற­அ­டிப்­ப­டை­யி­லு­மே­ அ­வ­ருக்கு ஜனா­தி­ப­தியால் பொது­மன்­னிப்பு­வ­ழங்­கப்பட்­ட­தா­க­ நாங்கள் அறி­கிறோம். 

ஆனால் வெளியில் வந்­து­ சி­ல­மா­தங்­க­ளுக்­குள்­ளேயே நீதி­மன்றக் கட்­ட­ளையை ஏற்­க­ம­றுத்து, பௌத்­த­பிக்­குகள் சொல்­வ­துதான் முதன்­மை­யா­னது என்றும் நீதி­மன்ற கட்­ட­ளைகள், தீர்ப்­புக்­க­ளை­யும்­விட தன­து­ தான்­தோன்றித்தன­மா­ன­ க­ருத்­துக்கள் தான் உயர்ந்­தது என்றும் செயற்­ப­டக்­கூ­டிய இந்த ­பௌத்­த­பிக்­கு­ தொ­டர்­பாக இலங்கை அர­சாங்­கமும், இலங்­கையின் நீதித்­து­றையின் உயர்­பீ­டமும் எத்­த­கைய தீர்­மா­னங்­களை மேற்­கொள்ளப் போகின்­ற­ன­ என்ப­தை­ த­ய­வுசெய்­து­ மக்­க­ளுக்­கு­ அ­றி யத் தரு­மா­று­ கேட்­டுக்­கொள்­கின்றோம்.இனத்துவேஷத்தையும் இனமோதலையும் உருவாக்கக்கூடிய ஞானசாரதேரரின் கருத்துக்களை ஈழமக்கள் புரட்சிகர விடு ­தலை முன்­ன­ணி  மீண்டும் ஒருமுறை வன் மையாகக் கண்டிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41