வீதியில் சென்ற நபர் ஒருவரிடம் தீப் பெட்டி கேட்டு அவர் அதை கொடுக்க மறுத்ததும் தீப்பெட்டி கேட்டவர்கள் குறித்த நபரை கத்தியால் வெட்டியுள்ளதுடன் கடித்தும் காயப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.(நவம்)


தாக்குதலுக்கு இலக்கான 43 வயதுடைய  ஐயாத்துறை ராஜசேகர் என்ற நபர் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தாக்குதலை மேற்கொண்ட  17 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.