யாழில் உள்ள பிரபல விடுதியின் முக்கிய ஆவணங்கள் வீதியில்

Published By: Digital Desk 4

01 Oct, 2019 | 08:12 PM
image

யாழில்.உள்ள பிரபல நட்சத்திர விடுதியின் ஆவணங்கள் வீதியில் வீசப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. 

யாழ்.பலாலி வீதியில் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் வங்கிகளுக்கு முன்பாக குறித்த ஆவணங்கள்  வீசப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. 

குறித்த விடுதியில் தங்கியிருந்தவர்களின் ஆள் அடையாள அட்டை , கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களின் பிரதிகள் , விடுதியின் வங்கி ஆவணங்கள் உள்ளிட்ட விடுதியின் கணக்குகள் தொடர்பிலான ஆவணங்கள் என்பனவே வீதியில் வீசப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. 

குறித்த விடுதியின் ஆவணங்கள் அடங்கிய பொதிகள்  வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யும் போது அவை வீதியில் தவறி விழுந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது, 

ஆவணங்கள் அடங்கிய பொதி தவறி விழுந்திருந்தாலும் அவற்றை கொண்டு சென்றவர்கள் அந்த ஆவண பொதிகளை வீதியில் இருந்து அப்புறப்படுத்தாமல் விட்டு சென்றமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்திருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55