எகிப்துக்கு சொந்தமான பயணிகள் விமானமொன்று 59 பயணிகள் மற்றும் 10 விமான சிப்பந்திகளுடன் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸ் தலைநகர் பரிஸிலிருந்து கெய்ரோ நோக்கி பயணித்த எகிப்து விமான சேவைக்கு சொந்தமான எம். எஸ். 804  என்ற பயணிகள் விமானமே நேற்று இரவு 11 மணியளவில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எகிப்தின் வான்வெளி விமான பரப்பிலிருந்து 80 மைல் தொலைவில் கட்டுப்பாட்டறைக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் விமானத்தை தேடும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் எகிப்து விமானவேவை தெரிவித்துள்ளது.