30 நாட்களில் இலங்கை அரசாங்க நிதி சந்தைக்கு 15 பில்லியன் ரூபா உட்பாய்ச்சல்

Published By: Raam

19 May, 2016 | 08:43 AM
image

சிங்­கப்­பூரில் இடம்­பெற்ற இலங்கை முத­லீட்டு உச்சி மாநாட்­டினை அடுத்து இலங்கை அர­சாங்க நிதிச்­சந்தை 15 பில்­லியன் ரூபா தேறிய உட்­பாய்ச்­சலை பெற்­றுக்­கொண்­டது. இந்த நிலைமை உச்சி மாநாட்­டிற்கு முந்­திய 12 மாதங்­களில் 270 பில்லியன் ரூபா வெளிப்­பாய்ச்­ச­லாக அமைந்­தி­ருந்­தது.

இலங்கை முத­லீட்டு உச்­சி­ம­கா­நா­டா­னது கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை சிங்­கப்­பூரில் இடம் பெற்­றது. நிதித்­து­றையைச் சேர்ந்த பல்­வேறு நிறு­வ­னங்கள், கூட்­டுத்­தா­ப­னங்­களின் நூற்­றுக்­க­ணக்­கான தொழில் நிபு­ணர்கள் ஆகியோர் இதில் பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர். இலங்கை அர­சாங்­கத்­தி­னதும், நிதி மற்றும் வர்த்­தகத் துறை­களின் குறிப்­பி­டத்­தக்க நிபு­ணர்கள் மற்றும் கல்­வி­மான்கள் உட்­பட அதிக எண்­ணிக்­கை­யான பிர­பல முக்­கி­யஸ்­தர்கள் பலரும் இங்கு உரை நிகழ்த்­தி­னார்கள்.

இந்த உச்­சி­மா­நாட்டில் முத­லீட்­டா­ளர்கள் மத்­தியில் நம்­பிக்­கையை பெரு­ம­ளவு ஏற்­ப­டுத்­து­வ­தில்­ முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­ட­துடன் ஆசி­யாவில் துரி­த­மாக வளாச்­சி­ய­டைந்து வரும் பொரு­ளா­தா­ர­ நா­டு­களில் ஒன்­றாகத் திகழும் இலங்­கையின் நிலைமை பற்­றிய கருத்தும் மேம்­பட்­டது.

பேப்­பர்ச்­சுவல் ரெஷரீஸ் நிறு­வன குழு­மத்தின் தலை­வரும், பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான கசுன் பலி­சேன இங்கு கருத்து வெளி­யி­டு­கையில், இலங்­கையில் முக்­கி­ய­மான பொரு­ளா­தார மேம்­பாட்டு நிகழ்வு இடம்­பெ­ற­வி­ருக்­கி­றது. ஏவு­க­ணை­யிலும் பார்க்க துரி­த­மாக அது செயற்­பட இருப்­ப­தனால், அது இடம்­பெறும் போது சந்­தைப்­ப­டுத்தல் மற்றும் பிர­சார நட­வ­டிக்­கைகள் என்­பன தேவைப்­ப­டாது.

அது வரை இலங்கை, முத­லீட்­டா­ள­ரு­ட­னான நம்­பிக்­கையைப் பெற்று அத­னைக்­கட்­டி­யெ­ழுப்­பு­வது அவ­சி­ய­மாகும்.

ஏனைய நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இலங்கை இதனைப் பூர்த்தி செய்யும் என்­பது, எமது நம்­பிக்­கை­யாகும் என குறிப்­பிட்டார்.

உள்ளூர் மற்றும் சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­க­ளுடன் இலங்­கையின் கடன் மற்றும் பங்­குச்­சந்­தை­க­ளு­ட­னான சந்­தர்ப்­பங்­களை ஏற்­ப­டுத்தி, அதி­வி­சே­ட­ மு­த­லீட்டுச் சேவைகள் மூலம் இலங்­கையின் முத­லீட்டுச் சந்­தையின் வளர்ச்­சிக்கும் அபிவிருத்திக்கும் பேப்பர்ச்சுவல் ரெஷரீஸ் நிறுவனம் உதவிவருகின்றது.

சிங்கப்பூரில் சமீபத்தில் முடிவடைந்த முதலீட்டு உச்சிமாநாட்டில் இதற்கு முன்னுரிமையளித்து இந்த நிறுவனமே முக்கிய அனுசரணையாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58