அரச நிறுவன ஊழல் மோசடி விவகாரம் : ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

Published By: R. Kalaichelvan

01 Oct, 2019 | 12:55 PM
image

(இரா.செல்வராஜா)

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்கள் மற்றும் மோசடிகள் ஆகியன தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஓய்வுப் பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபயரத்ன தலைமையிலான ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். 

குறித்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுப் பெற்றவர்களான மேல் நீதிமன்ற நீதியரசர் சரோஜினி கோசலா வீரவர்தன, கணக்காள்வாளர் நாயகம் கோரளே ஆராச்சிகே பிரேமதிலக, அமைச்சின் செயலாளர் லலித் ஆர்.டீ. சில்வா, பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.கே.டீ. விஜய அமரசிங்க ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தனர். 

பிரஸ்தாப ஆணைக்குழுவின் இரண்டு இடைக்கால விசாரணை அறிக்கைகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் விசாரணையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத காரணத்தை கருத்திற்கொண்டு இந்த மாதம் 31 ஆம் திகதி முதல் விசாரணை கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22