மொட்டு சின்னத்தை மாற்றாவிடில் தனித்து களமிறங்குவதே சிறந்த செயற்பாடு : பசிலுடன் ஜனாதிபதி பேச்சு

Published By: R. Kalaichelvan

01 Oct, 2019 | 10:53 AM
image

(ஆர்.யசி)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந் திரக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் நேற்றிரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடவேண்டியதன் அவசியம் குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் மொட்டு சின்னத்தில் அவர்களுடன் இணைந்து போட்டியிடுவது என்பது சாத்தியமாகப்போவதில்லை. அவர்களும் அந்தச் சின்னத்தை விட்டு வருவதாக இல்லை. எனவே தனித்துப் போட்டியிடுவதே சரியானது என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ  மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் ஜனாதிபதி இதன்போது விளக்கியுள்ளார்.

நேற்றைய தினம் மீண்டும் பஷில் ராஜபக்ஷவை சந்தித்து தான் நடத்திய பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி எடுத்துக்கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தை கைவிட்டு பொது சின்னத்தில் போட்டியிட முன்வந்தால் இணைந்து செல்லலாம் என்றும் இல்லையேல் தனித்து போட்டியிடுவதே சிறந்தது என்றும் பெரும்பான்மையானோர் இங்கு கருத்துக்கூறியுள்ளனர்.

இதன்போதும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு விடுத்த அழைப்பு குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த க்கூட்டத்தில் காலம் தாமதித்தே ஜனாதிபதி கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02