'கோத்தாவை இலங்கை பிரஜையாக ஏற்கக்கூடாது' - மனு மீதான விசாரணை நாளை ஆரம்பம்

Published By: J.G.Stephan

01 Oct, 2019 | 10:43 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஸ்ரீ லங்கா பொது ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும், முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோத்­த­பாய ராஜ­பக் ஷவை இலங்கை பிர­ஜை­யாக ஏற்றுக்கொள்­வதை தடுத்து உத்­த­ர­வொன்றைப் பிறப்­பிக்­கு­மாறு கோரி,  மேன் முறை­யீட்டு நீதி­மன்றில்  'செட்­டி­யோ­ராரி' எழுத்­தாணை (Certiorari writ) மனு­வொன்று  தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. 

சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்­க­ளான காமினி வெயங்­கொட மற்றும் பேரா­சி­ரியர் சந்­ர­குப்த தேனு­வர ஆகியோர் தாக்கல் செய்­துள்ள இந்த மனுவை   மூவ­ர­டங்­கிய நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில்  நாளை  2 ஆம் திகதி முதல் பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்ள மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம்  நேற்று தீர்­மா­னித்­தது.  

மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி  யசந்த கோதா­கொட தலை­மையில் நீதி­பதி  அர்ஜுன் ஒபே­சே­கர ஆகியோர் அடங்­கிய இருவர் கொண்ட நீதி­ப­திகள் குழாம் முன்  இம்­மனு விசா­ர­ணைக்கு வந்த போது, நீதி­பதி மஹிந்த சம­ய­வர்­த­ன­வையும் உள்­வாங்கி மூவர் கொண்ட நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் நாளை முதல் பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்ள தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அதன்­படி இம்­மனு நாளை 2 ஆம் திக­தியும் நாளை மறு தினம் 3 ஆம் திகதி மற்றும் 4 ஆம் திகதி ஆகிய தினங்­களில் பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

 நேற்­றைய தினம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தின் தலைமை நீதி­பதி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யசந்த கோதா­கொட மற்றும் அர்­ஜுன ஒபே­சே­கர ஆகிய நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் இந்த மனு பரி­சீ­ல­னைக்கு வந்­தி­ருந்­தது.

இதன்­போது மனு­தா­ரர்­க­ளான காமினி வெயங்­கொட மற்றும் பேரா­சி­ரியர் சந்­ர­குப்த தேனு­வர ஆகியோர் சார்பில்  சிரேஷ்ட  சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­னாண்டோ நீதி­மன்­றத்தில் ஆஜ­ராகி, பிர­தி­வா­தி­யான கோத்­த­பாய ராஜ­பக்ஸ ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­காக எதிர்­வரும் 7 ஆம் திகதி வேட்­பு­மனு தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளதால், அவ­சர அவ­சி­ய­மாக  கருதி இந்த வழக்கை விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளு­மாறும் கோரினார். அத்­துடன்  வழக்கின் முக்­கி­யத்­து­வத்தை கருத்தில் கொண்டு மூவ­ர­டங்­கிய நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் இ்ந்த வழக்கை பரி­சீ­ல­னைக்கு  எடுத்துக் கொள்­ளு­மாறும் சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­ணான்டோ கோரினார்.

இந் நிலையில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஸ சார்­பாக  ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளான ரொமேஷ் டி சில்வா, அலி சப்றி ஆகி­யோ­ருடன் சட்­டத்­த­ர­ணி­க­ளான சுகத் கல்­தேரா, ருவந்த குரே, ஹரித் டி மெல் ஆகியோர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சனத் விஜே­வர்­த­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். இதில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா இந்த வழக்கு அர­சியல் காழ்ப்­பு­ணர்ச்சி கார­ண­மாக தாக்கல் செய்­யப்­பட்ட ஒன்­றாகும் என்­ப­துடன், அதி­லுள்ள குற்­றச்­சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­றவை எனவும் குறிப்­பிட்டார். அதனால்  வழ­மை­யான நடை­மு­றை­களின் பிர­காரம் இந்த மனுவை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­து­வது போது­மா­னது எனவும்  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா எடுத்­து­ரைத்தார்.

எவ்­வா­றா­யினும், இரு தரப்பு விட­யங்­க­ளையும் ஆராய்ந்த பின்னர், இந்த மனுவில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்கள், அர­சியல் ரீதி­யான கார­ணி­களை கொண்­டி­ருப்­பதால், மனுவை மூவ­ர­டங்­கிய நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் விசா­ரிப்­பதே பொருத்­த­மா­னது என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற தலைமை நீதி­பதி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யசந்த கோதா­கொட அறி­வித்தார். அதன்­படி  மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றத் தலைமை நீதி­பதி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யசந்த கோதா­கொட, அர்ஜுன் ஒபே­சே­கர மற்றும் மஹிந்த சம­ய­வர்­தன ஆகிய மூவ­ர­டங்­கிய நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் நாளை  2 ஆம் திகதி மனுவை பரி­சீ­லிப்­ப­தற்கு திகதி நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரான கோத்­த­பாய ராஜ­பக்­ஸவை, இலங்கை பிர­ஜை­யாக ஏற்றுக் கொள்­வதை தடுக்கும்  உத்­த­ர­வொன்றை அரச நிர்­வாக மற்றும் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­வர்­த­ன­வுக்கு பிறப்­பிக்­கு­மாறு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் மனு தாக்கல் செய்­யப்­பட்­டது.  பேரா­சி­ரியர் சந்­தி­ர­குப்த தெனு­வர மற்றும் காமினி வியன்­கொட ஆகி­யோ­ரினால் தாக்கல் செய்­யப்­பட்ட அம்­ம­னுவில் பிர­தி­வா­தி­க­ளாக  குடி­வ­ரவு - குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் கட்­டுப்­பாட்­டாளர் ஆர்.எம்.ரத்­நா­யக்க, ஆட்­ப­திவுத் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் வியானி குண­தி­லக, அரச நிர்­வாக மற்றும் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­வர்­தன, அமைச்சின் செய­லாளர் காமினி சென­வி­ரத்ன, எதிர்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜக்ஸ, முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஸ, பதில் பொலிஸ் மாஅ­திபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன, குற்றப் புல­னாய்வுப் பிரிவின்  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஷானி அபே­சே­கர, குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விஷேட விசா­ரணை அறை பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் லலித் திஸா­நா­யக்க ஆகியோர்  மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர்.

 இந் நிலையில் நேற்­றைய தினம் இம்­மனு பரி­சீ­லனை செய்­யப்­பட்ட போது, பிர­தி­வா­தி­களில் குடி­வ­ரவு - குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் கட்­டுப்­பாட்­டாளர் ஆர்.எம்.ரத்­நா­யக்க, ஆட்­ப­திவுத் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் வியானி குண­தி­லக, அரச நிர்­வாக மற்றும் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­வர்­தன, அமைச்சின் செய­லாளர் காமினி சென­வி­ரத்ன ஆகி­யோ­ருக்கு  நாளை 2 ஆம் திகதி மன்றில் விளக்­க­ம­ளிக்க உத்­த­ர­விட்ட நீதி­மன்றம், கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் சர்ச்­சைக்­கு­ரிய கடவுச் சீட்டு, அடை­யாள அட்டை தொடர்­பி­லான அனைத்து ஆவ­ணங்­க­ளையும் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் ஒப்­ப­டைக்­கவும் உத்­த­ர­விட்­டது.

முன்­ன­தாக தனது அமெ­ரிக்க குடி­யு­ரிமை இரத்து செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்து இலங்­கையின் கட­வுச்­சீட்டு மற்றும் தேசிய அடை­யாள அட்டை என்­ப­வற்றை முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் பெற்றுக் கொண்­டுள்­ள­தாக மனு­தா­ரர்கள் தாம் தாக்கல் செய்த எழுத்­தாணை கோரும் மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.  உரிய  பிர­ஜா­வு­ரிமை சான்­றி­தழை சமர்ப்­பிக்­காமல் கட­வுச்­சீட்டு மற்றும் தேசிய அடை­யாள அட்டை என்­ப­வற்றை பெற்றுக் கொண்­டுள்­ள­தாக தமக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ள மனு­தா­ரர்கள், அந்த ஆவ­ணங்கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்ள விதம் சட்­டத்­திற்கு முர­ணாகும் என்றும் அதில் குறிப்­பிட்­டுள்­ளனர். 

எனவே கோத்­த­பாய  ராஜ­பக்­ஸ­வுக்கு கட­வுச்­சீட்டு மற்றும் தேசிய அடை­யாள அட்டை விநி­யோ­கிப்­ப­தற்கு மேற்­கொண்ட தீர்­மா­னத்தை இரத்து செய்ய வேண்டும் எனவும், அவ­ரது  இலங்கை குடி­யு­ரி­மையை ஏற்­றுக்­கொள்­வதை தடுத்து  உத்­த­ர­வொன்றைப் பிறப்­பிக்­கு­மாறு கோரி­யுள்ள மனு­தா­ரர்கள், இந்த மனுவை விசா­ரித்து இறுதி தீர்ப்பு வழங்கும் வரையில் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்ள கட­வுச்­சீட்டு மற்றும் தேசிய அடை­யாள அட்டை  ஆகியவற்றின் செயற்பாட்டுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாரும் கோரியுள்ளனர்.

 இந்த விவகாரத்தில் பிரதிவாதியான கோத்தபாய ராஜபக்ஷவுக்கு மேலதிகமாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவின் கீழ் சட்டத்தரனிகளான  நவீன் மாரப்பன,  கணேஷ் தர்மவர்தன உள்ளடங்கிய குழுவினரும்,  அமைச்சர் வஜிர அபேவர்தன , ஏனைய அரச ஊழியர்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நரின் புள்ளேயும் ஆஜராகினர்.

 ஏற்கனவே இந்த விவகாரத்தையும் உள்ளடக்கியதாக சி.ஐ.டி. குற்றவிசாரணை  ஒன்றினை ஆரம்பித்து கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38