அயல்வீட்டு இளைஞன் வீட்டுக்குள் நுழைந்து அட்டூழியம் - பொலிஸார் துணை ; பாதிக்கப்பட்ட குடும்பம் முறைப்பாடு

Published By: Digital Desk 4

30 Sep, 2019 | 09:21 PM
image

கொக்குவில் கிழக்கு ரயில் நிலைய வீதியில் உள்ள வீடொன்றில் அத்துமீறி அட்டூழியத்தில் ஈடுபட்ட அயல்வீட்டு இளைஞனுக்கு பொலிஸார் துணை நிற்பதால் தமக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகம் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்ட குடும்பம் முறைப்பாட்டை வழங்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான வயோதிபரும் அவரது துணைவியாரும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற நிலையில் தாக்குதல் நடத்தியவருக்கு கோப்பாய் பொலிஸார் நீதிமன்றின் ஊடாக பிணையில் பெற்றுக்கொடுத்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய அயல்வீட்டு இளைஞன் சுதந்திரமாக நடமாடுவதாலும் அவரது அச்சுறுத்தல் தொடர்ந்தும் தமக்கு இருப்பதாகவும் தெரிவித்து அந்தக் குடும்பம் வீட்டிலிருந்து இடம்பெயர்ந்து உறவினர்கள் வீட்டில் கடந்த இரண்டு வாரங்களாகத் தங்கியுள்ளனர்.

கொக்குவில் கிழக்கு ரயில் நிலைய வீதியில் வசிக்கும் ரவீந்திரன் செல்வராசாத்தி என்ற குடும்பப்பெண்ணே யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

அவர் வீட்டில் நடத்தப்பட்ட அட்டூழியம் தொடர்பான சி.சி.ரி.வி பதிவையும் தனது முறைப்பாட்டில் ஆதாரமாக வழங்கியுள்ளார்.

“என்னுடன் மகனும் மகளும் வசிக்கின்றனர். மகன் ஆசிரியர். மகனும் மகளும் வீட்டில் இல்லாதவேளை நானும் கணவரும் வீட்டிலிருந்த போது, அயல்வீட்டு பிரசாத் என்ற இளைஞன் எனது வீட்டுப் படலை ஏறிக் குதித்து வீட்டுக்குள் வந்தார். என்னையும் கணவரையும் தாக்கிவிட்டு வீட்டிலிருந்த பொருட்களை அடித்து உடைத்தார்.

அத்தோடு விட்டுக்கு முன்னால் நிறுத்திவைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் தீயிட்டு எரித்து அட்டூழியத்தில் ஈடுபட்டு தப்பித்தார்.

சம்பவம் இடம்பெற்ற பின்னர் வீட்டுக்கு வந்த மகனும் மகளும் எங்களை வைத்தியசாலை அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. கடந்த 19ஆம் திகதி அயவீட்டு இளைஞனை கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த பொலிஸார், அவரை மறுநாள் நீதிமன்றின் ஊடாக பிணையில் விடுவித்தனர் என்று அறிந்தோம்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நவம்பர் முதலாம் திகதி இடம்பெறும் என்றும் பொலிஸார் எமக்குத் தெரிவித்தனர்.

அயல்வீட்டு இளைஞனால் எமக்குத் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் இருப்பதால் நாம் வீட்டிலிருந்து வெளியேறி கொக்குவில் மேற்கில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருக்கின்றோம்.

தாக்குதல் நடத்திய இளைஞனுக்கும் கோப்பாய் பொலிஸாருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நீதிமன்றின் ஊடாக அவருக்கு பிணை பெற்றுக்கொடுத்தது பொலிஸார் என்று அறிந்துகொண்டதால் அதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் உள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம்.

அத்துடன், எனக்கும் கணவரும் எமது பிள்ளைகளுக்கும் பிரசாத்தால் அச்சுறுத்தல் உள்ளதால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளோம்” என்று ரவீந்திரன் செல்வராசாத்தி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32