சம்பள முரண்பாட்டிற்கு தீர்வில்லையேல்  புதன் முதல் மீண்டும் வேலைநிறுத்தம் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 

Published By: R. Kalaichelvan

30 Sep, 2019 | 06:59 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வை வழங்காவிட்டால் எதிர்வரும் இரண்டாம் திகதி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு விரைவாக தீர்வொன்றை காணவேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் தொழிற்சங்க போராட்டத்துக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும்.

கடந்த வாரம் அமைக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு உறுப்பினர்களில் அமைச்சர்களான மங்கள சமரவீர, ரன்ஜித் மத்தும பண்டார, வஜிர அபேவர்த்தன, ராஜித்த சேனாரத்ன மற்றும் ராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

 இந்த சம்பள முரண்பாட்டுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியாமல் போயுள்ளது. 

அதனால் எமது சம்பள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வொன்றை பெற்றுக்ககொடுக்க தவறினால் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்திருக்கின்றோம். 

நோயாளர்களின் நலனை கருத்தில்கொண்டே இதுவரை காலமும் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்து வருகின்றோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47