இதய பாதிப்பை உருவாக்கும் காற்றுமாசு

Published By: Digital Desk 4

30 Sep, 2019 | 02:25 PM
image

கடந்த காலங்களில் காற்றில் உள்ள மாசுகளினால் மக்களுக்கு சுவாசக்கோளாறு அதிகமாக ஏற்பட்டன என்பதை அறிவோம். ஆனால் தற்பொழுது காற்று மாசுவினால் இதய பாதிப்பு ஏற்படுவதாக  அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சிகரெட் புகைப்பதால் இதயநோயிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தற்போதும் இருக்கிறது. ஆனால் தற்போது சிகரெட் புகைப்பதை விட, காற்றில் கலந்துள்ள மாசுவின் காரணமாக இதய பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தற்போதைய கணக்கின்படி இலட்சம் மக்களில் இருநூறு பேர் காற்று மாசின் காரணமாக இதய நோயால் பாதிக்கப்படுகிறார்கள். 

வாகனத்தை ஓட்டும் சாரதி ஒருவர், போதிய சுவாச பாதுகாப்பு கவசத்தை அணியாமல் ஒரு சிக்னலில் மூன்று நிமிடங்களுக்கு மேல் இருந்தால்... அதனால் ஏற்படும் காற்று மாசு, அவர் ஒரே சமயத்தில் மூன்று சிகரெட் புகைப்பதற்கு சமமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

காற்று மாசு குருதியிலுள்ள ஹிமோகுளோபின் அளவிலும், தன்மையிலும் பாதிப்பை உருவாக்குகிறது. அதாவது ஹீமோகுளோபினிலுள்ள கார்பாக்சி அமிலத்தின் அளவை அதிகமாக்குகிறது. இதன் காரணமாக பல்வேறு பாதிப்புகள் உருவாகிறது. இதனால் காற்று மாசு குறித்தும், இதய பாதிப்பு குறித்து போதிய விழிப்புணர்வை பெறவேண்டும்.  பயணத்தின் போதும், சிக்னலில் நிற்கும் போதும் போதிய எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

டொக்டர் மஞ்சுநாத்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04