கொழும்பிலுள்ள பாடசாலைக்கு முன் திடீரென தோன்றிய பாரிய குழி ! பொறுப்புக் கூறுவது யார் ?

Published By: Priyatharshan

30 Sep, 2019 | 02:25 PM
image

கொழும்பு - 15 மோதரை பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றுக்கு முன்னாள் தோன்றிய பாரிய குழியால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும்  அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளதுடன் இவ்வாறான சம்பவத்திற்கு யார் பொறுப்புக் கூறுவதெனவும் கேள்வியொழுப்பியுள்ளனர்.

கொழும்பு - 15 மோதரை பகுதியில் அமைந்துள்ள டிலாசால் பாடசாலையின் வாயிலுக்கு முன்பே இவ்வாறு பாரிய குழியொன்று கடந்த வியாழக்கிழமை தோன்றியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு ஏற்பட்ட பாரிய குழியானது தொடர்ந்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் பொது மக்கள் அது தொடர்பான எவ்வித விழிப்புணர்வுகளையும் எந்த அதிகாரிகளும் மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கின்றனர்.

குறித்த வாயிலை சிறுவர் பாடசாலை, குருக்கள் மடம் மற்றும் டிலாசால் பாடசாலை ஆகியவற்றுக்கு செல்வோர் பயன்படுத்துகின்றனர்.

இது தொடர்பில் நாம் குறித்த பகுதியைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது,

சம்பவ இடத்திற்கு தானும் தனது குழுவினரும் சென்று பார்வையிட்டதாகவும், நீர்வழங்கல் திணைக்களத்திடம் தொடர்பு கொண்டு கோட்டபோது, அவர்கள் குறித்த சம்பவத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என தெரிவித்ததாகவும் இதனை உடனடியாக செய்யமுடியாதெனவும் இதுவொரு பாரிய பிரச்சினையெனவும் தெரிவித்ததாக மாநகர சபை உறுப்பினர் தெரிவித்தார்.

அதேவேளை, குறித்த இடத்திற்கு நீர் வடிகாலமைப்பு அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவித்த மாநகர சபை உறுப்பினர், இது குறித்து மேலதிக நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதால் எவ்வித உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் ஏனையவர்கள் மீது குற்றஞ்சாட்டுவதை விடுத்து மக்களின் நலனில் அக்கறை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது உரியவர்களின் பொறுப்பு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08