இந்தியாவில் தொடரும் அடை மழையால் 110 பேர் உயிரிழப்பு!

Published By: Vishnu

30 Sep, 2019 | 11:30 AM
image

இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்து வரும் அடை மழையினால் உண்டான வெள்ளப் பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களில் சிக்கி மொத்தமாக 110 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி பீகாரில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 23 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 35 பேரும் உயிரிழந்துள்ளளதுடன் மொத்தமாக நாடு முழுவதும் 4 நாட்களில் 110 பேர் உயிரிழந்துள்ளனர். 

பீகார் தலைநகர் பாட்னா, பாகல்பூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரம் முறிந்து விழுந்தது, சுவர் இடிந்து விழுந்தது உட்பட மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் வழங்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதே போல் உத்தரப் பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 35 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், கட்டடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஷகாரன்பூர் என்ற இடத்தில் மலை மீது உள்ள புகழ்பெற்ற சாகம்பரி தேவி கோவில் அருகே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. கோயிலுக்குள் சிக்கியவர்களை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். 

இதேவேளை ராஜஸ்தானில் 12 பாடசாலை குழந்தைகளுடன் சென்ற லொறி ஒன்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு, கரையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. உடனடியாக விரைந்து சென்ற உள்ளூர் மக்கள் அந்த லொறியில் இருந்தவர்களையும், பாடசாலை குழந்தைகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13