படித்தாலும் அடித்தார்கள் தொழுகையில் ஈடுபட்டாலும் அடித்தார்கள்- நைஜீரியாவில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்

Published By: Rajeeban

29 Sep, 2019 | 08:14 PM
image

நைஜீரியாவில் பாடசாலையொன்றில் மோசமான நிலைமையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை மீட்கப்பட்ட 500ற்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் நரகத்தில் வாழ்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

நீங்கள்தொழுகையில்  ஈடுபட்டாலும் தாக்குவார்கள் படித்தாலும் தாக்குவார்கள் என இசாஇப்ராகிம் என்ற 29 வயது இளைஞர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரத்திற்கு முன்னர் தனது நடத்தையை திருத்துவதற்காக குடும்பத்தவர்கள் குறிப்பிட்ட பாடசாலைக்கு அனுப்பினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

என்னை பழைய மின்பிறப்பாக்கியொன்றில் சங்கிலியால் பிணைத்து கைகளை பின்னால் கட்டி கூரையில் கட்டி தொங்கவிட்டார்கள்  என அவர் தெரிவித்துள்ளார்.

எனக்கு பல காயங்கள் ஏற்பட்டன உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன நீங்கள் உறங்கிக்கொண்டிருந்தால் கூட வந்து குழப்புவார்கள் எழுப்புவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்களை பட்டினிபோட்டார்கள் வெறும்சோற்றை மாத்திரம் வழங்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மனிதர்கள் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இடம் பலர் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிலர் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் துஸ்பிரயோகங்களிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறா இஸ்லாமிய பாடசாலைகள் பலவற்றில் இவ்வாறான செயல்கள் இடம்பெறலாம் என கரிசனை காணப்படுவதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் முஸ்லீம்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகளிற்கு அனுப்புவதற்கான வசதியற்றவர்களாக காணப்படுகின்றனர் அதன் காரணமாக இவ்வாறான குரான் பாடசாலைகளிற்கு அனுப்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பாடசாலைக்கு அனுப்பபட்டவர்களை திருத்துவதற்காக இந்த சித்திரவதைகளை மேற்கொண்டுள்ளனர் என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பாடசாலையிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தற்போது உறவினர்களிடம் கையளிக்கப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47