பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஸ்ரீ.சு.கட்யின் செயற்குழுவை உடனடியாக கூட்ட தீர்மானம்

Published By: Vishnu

29 Sep, 2019 | 05:35 PM
image

(இரா.செல்வராஜா)

ஜனாதிபதிக்கும் எதிர்கட்சி தலைவர் தலைமையிலான குழவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவடைந்ததை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு அவசரமாக கூட இருப்பதாக கட்சியின் பொது செய்லாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,எதிர் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ,ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராயப்பட்டது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவார் என்ற நிலைபாட்டிலேயே மஹிந்த குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பழமை வாய்ந்த கட்சி என்பதால் அதை விடுத்து மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப் பேச்சுவார்த்தையின் போது உறுதிப்பட தெரிவித்துள்ளார். 

இதனால் எந்த விதமான இணக்கப்பாடும் காணப்படாத நிலையிலும் அடுத்த திகதி நிர்ணயிக்கப்படாமல் பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10