முதியோர்கள் சமூகத்திடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? 

Published By: Digital Desk 4

28 Sep, 2019 | 06:23 PM
image

ஐ நா சார்பில் ஒக்டோபர் முதல் திகதி ‘உலக முதியோர் தின’மாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் முதியோர்கள் சமூகத்திடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? வயதானவர்களுக்கு சமூகம் சொல்வது என்ன? என்பது குறித்து அனைத்துத்துறை மருத்துவர்களும் ஒருமித்த குரலில் நான்கு விடயங்களை முன்னிறுத்துகிறார்கள்.

55 வயதிற்கு மேற்பட்டவர்களை மருத்துவ துறை முதியோர் என்று குறிப்பிடுகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு தொற்றா நோய்கள் எனப்படும் நீரிழிவு, இரத்த அழுத்தம், உயர் குருதி அழுத்தம், கொலஸ்ட்ரால், பக்கவாதம், நினைவு திறன் இழப்பு, பற்கள் தொடர்பான பிரச்சினை என பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளுடன் வாழ்க்கையை எதிர் கொண்டிருப்பார்கள். 

அதனால் அவர்களுக்கு ஆரோக்கியமாக வாழ்வதற்கான எளிய உடற்பயிற்சியையும், உணவு பழக்கத்தையும் அறிமுகப்படுத்தி, நடைமுறைபடுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து மனநிறைவுடன் கூறிய அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கான குறிப்புகளை நாளாந்தம் ஒன்றிரண்டு என வழங்கலாம். 

சமூகத்தில் முதியவர்களின் பங்களிப்பு அவர்களிடம் பொதிந்திருக்கும் அனுபவ ஆற்றலை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்ற சிந்தனை போக்கை இளைய தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும். இதற்கு அவர்களின் நினைவுத்திறன், இளையதலைமுறையுடன் இயல்பாக பழகும் மனப்பாங்கு ஆகியவை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதற்காக அவர்களுடன் நாளாந்தம் சிறிது நேரம் ஒதுக்கி உரையாடுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள் அல்லது வயதானவர்கள் இல்லாதவர்கள் முதியோர் இல்லங்களுக்கு சென்று அங்குள்ளவர்களிடம் அன்பையும் அரவணைப்பையும் வழங்கினால்..அவர்களின் மன ஆரோக்கியம் மேம்படும்.

வயதானவர்களும் தங்களது நிலை குறித்து, குறிப்பாக ஆரோக்கிய நிலை குறித்து நன்குணர்ந்து வாரிசுகள், வைத்தியர்கள், தாதியர்கள் ஆகியோருக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவ்வாறு அளித்தால் அவர்களின் முதுமைக் காலம் இனிமையாய் அமையும்.

டொக்டர் ஸ்ரீதேவி.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29