வடக்கு, கிழக்கு மக்கள் இம்முறையும் ஏமாறக்கூடாது: ஒருமுறை எம்முடன் கைகோர்க்க வேண்டும்

Published By: J.G.Stephan

28 Sep, 2019 | 02:22 PM
image

வடக்­கு–­கி­ழக்கு மக்கள் இம்­மு­றையும் ஏமாற்­ற­ம­டை­யக்­கூ­டாது. ஒரு­முறை எங்­க­ளுடன் கைகோ­ருங்கள்.  வடக்கு கிழக்கு மக்­களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தி அபி­வி­ருத்­திகள் செய்­யப்­படும். அனை­வ­ரதும் சிவில் உரிமை பாது­காக்­கப்­படும். வடக்கு கிழக்கு மக்­களின் பிரச்­சினை விட­யத்தில் அந்த மக்கள் முன்­வ­ர­வேண்டும். உங்கள் பிரச்­சி­னை  உங்­க­ளுக்­குத்தான் தெரியும்.

நீங்கள்  ஒரு பக்­கத்தில் மறைந்து இருக்­க­வேண்டாம். நாங்கள் கரங்­களை நீட்­டி­யுள்ளோம். அவற்றை பற்­றிக்­கொள்­ளுங்கள் என்று ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சியின் ஸ்தாப­கரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷில் ராஜபக் ஷ  தெரி­வித்தார். 

கேசரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே அவர் இதனை குறிப்­பிட்டார். செவ்­வியின் முழு விபரம் வரு­மாறு. 

கேள்வி: ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்­டு­விட்­டது. உங்கள் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­வித்­துள்­ளீர்கள். அடுத்­த­ கட்­ட­மாக எவ்­வா­றான நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றீர்கள்? 

பதில்:நாங்கள் மிகவும் திட்­ட­மிட்ட முறை யில் இந்த தேர்­த­லுக்கு தயா­ரா­கினோம். எந்­த­வொரு எதிர்க்­கட்­சியும்   அடுத்த தேர்­த­லுக்­கா­கவே   தமது  உழைப்பை வழங்கும். ஆனால் 

நல்­லாட்சி அர­சாங்கம் மக்­களின் ஜன­நா­யக உரி­மை­யான தேர்­தலை நடத்­தாமல்  இருந்து வந்­தது. இரண்­டரை வரு­டங்கள் கடந்தே உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் நடத்­தப்­பட்­டது. அதன்­பின்னர்   மாகாண சபை  தேர்­தலை நடத்­தா­ம­லேயே  விட்­டு­விட்­டது. தொடர்ந்து ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பா­கவும் பல்­வேறு கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்டு வந்­தன. அந்த விட­யத்தில் சந்­தே­கமும்  இருந்­தது. 

அதனால் நாங்கள் தேர்­தலை கஷ்­டப்­பட்டே பெற­வேண்­டி­யி­ருந்­தது.  ஜனா­தி­பதி தேர்தல் விட­யத்தில்  மக்­களின்  ஜன­நா­யக உரிமை உறு­திப்­ப­டுத்­தப்­படும் என்று நாங்கள் நம்­பினோம். அதன்­ப­டியே தேர்தல் அறி­விக்­கப்­பட்­ட­போது நாங்கள் எமது அமைப்பு நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்தே  இருந்தோம். 

எமது ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான விட­யங்­களை ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திக­தியே ஆரம்­பித்தோம். தேசிய சம்­மே­ள­னத்தை நடத்தி மஹிந்த ராஜபக் ஷவை கட்­சியின் தலை­வ­ராக நிய­மித்­த­துடன் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக  கோத்­த­பாய ராஜபக் ஷவை பெய­ரிட்டோம். அன்­றி­லி­ருந்து  தேர்தல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.  அதன்­படி தற்­போது கோத்­த­பாய ராஜபக் ஷ  அனைத்து  மத தலங்­க­ளுக்கும்  விஜயம் செய்து வரு­கின்றார். அத்­துடன் நாட்டின் அனைத்த துறை­சார்ந்த மக்­க­ளையும் பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்து பேச்சு நடத்தி வரு­கின்றார். அகில இலங்கை ரீதியில் மக்­களை சந்­தித்து பேச்சு நடத்தி வரு­கின்றார். 

கேள்வி:கோத்­த­பாய ராஜபக் ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வதில் கூட்டு எதி­ர­ணியின் அனை­வ­ரதும் ஏகோ­பித்த ஆத­ரவு கிடைத்­ததா?  

பதில் : இதற்­காக அனை­வ­ரதும்  ஆத­ரவும் விருப்­பமும் கிடைத்­தது. சில கட்­சி­களில் போன்று நெருக்­க­டிகள் எமது தரப்பில் காணப்­ப­ட­வில்லை.  இதனை  நாங்கள் சரி­யாக கிர­ம­மா­கவே செய்தோம். அனைத்து தரப்­பு­டனும் பேச்சு நடத்­தியே  வேட்­பா­ளரை தீர்­மா­னித்தோம். 

கேள்வி:கோத்­த­பாய ராஜபக் ஷ வினால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்­கு­களை பெறு­வது கடினம் என்ற விடயம் பேசப்­பட்­டு ­வ­ரு­கி­றது. அதனை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்? 

பதில்:சிறி­லங்கா பொது­ஜன பெர­முன ஒரு மதத்­துக்கோ இனத்­துக்கோ வரை­ய­றுக்­கப்­பட்ட கட்­சி­யல்ல.  இதனை நாம் ஆரம்­பத்­தி­லேயே கூறினோம். அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் நாங்கள் செயற்­ப­டு­கின்றோம். வடக்கு கிழக்­கிலும் நாங்கள் தற்­போது எமது  கட்­சியின் வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பித்து செயற்­ப­டுத்தி வரு­கின்றோம். விசே­ட­மாக வடக்கின் அனைத்து பகு­தி­க­ளிலும் இப்­போது எமக்கு ஆத­ரவு பெரு­கி­வ­ரு­கின்­றது. மலை­யக தமிழ் மக்­க­ளிடம் நாங்கள் இன்னும் செல்­ல­வில்லை. காரணம் எம்­முடன் இணையும் பல கட்­சிகள் மலை­ய­கத்தில் உள்­ளன. அவ்­வாறு கூட்­டி­ணைந்த பின்னர் நாங்கள் அங்கும் எமது செயற்­பா­டு­களை ஆரம்­பிப்போம். 

கேள்வி:பொது­ஜன பெர­முன கட்சி விட­யத்தில் சிக்கல் உள்­ள­தாக கூறப்­ப­ட­வில்லை. மாறாக கோத்­த­பாய ராஜபக் ஷ

வினால் தமிழ், முஸ்லிம் வாக்­கு­களை பெற முடி­ய­வில்லை என்று அல்­லவா கூறப்­ப­டு­கின்­றது? 

பதில்:கோத்­த­பாய ராஜபக் ஷ   தற்­போது முதல் முறை­யாக செயற்­பாட்டு அர­சி­யலில் ஈடு­ப­டு­கின்றார். மக்­களின் ஆணையை இது­வரை அவர் பெற­வில்லை. அவர் தமிழ் முஸ்லிம் மக்­க­ளுடன்  இணைந்து செயற்­ப­டு­கிறார். அவரை பற்றி தவ­றான தக­வல்கள் பரப்­பப்­ப­டு­கின்­றன.   அவர் அனைத்து தரப்­பி­ன­ரையும் இணைத்துச் செல்லும் மனி­த­வாதி. 
 

கேள்வி: கோத்­த­பாய ராஜபக் ஷவினால் தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ ரவை பெற முடியம் என்று கரு­து­கின்­றீர் ­களா?

பதில்:எனக்கு பாரிய நம்­பிக்கை உள்­ளது. இது­வரை காலமும் சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவே தமிழ் மக்­களின் அதிக வாக்­கு­களை பெற்­றவர். ஆனால் அத­னை­விட அதிக வாக்­கு­களை இம்­முறை கோத்­த­பாய ராஜபக் ஷ பெறுவார். 

கேள்வி:வடக்கில் கட்­சிகள்,  அமைப்­புக்கள் என யாருடன் தற்­போது இணைந்து செயற்­ப­டு­கின்­றீர்கள்? 

பதில்: ஈ.பி.டி.பி. கட்­சி­யி­ன­ருடன் இணைந்து செயற்­ப­டு­கின்றோம்.  வர­த­ராஜா பெரு­மாளும் எம்­முடன் இணைந்திருக்கின்றார். டாக்டர் விக்­னேஸ்­வ­ரனின் கட்சி எம்­முடன் உள்­ளது. உத­ய­ரா­ஸாவின் கட்சி எம்­முடன் உள்­ளது. இவ்­வாறு பல கட்­சி­க­ளுடன் வடக்கில் இணைந்து செயற்­ப­டு­கின்றோம். குறிப்­பாக மக்­க­ளுடன் இணைந்து முன் நகர்­கின்றோம். 

கேள்வி: மலை­ய­கத்தில் இலங்கை  தொழி­லாளர் காங்­கி­ர­ஸுடன் பேச்சு நடத்­தி­யுள்­ளீர்­களா? 

பதில்: தொண்­டமான் எம்­முடன் இணைந்து கொள்வார் என்ற பாரிய நம்­பிக்கை எமக்கு உள்­ளது. கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் அவர் எம்­முடன் இருந்தார். 

கேள்வி:ஆனால் இது­வரை  தொண்­ட­மா­னுடன் உங்கள் கட்சி ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் பேச­வில்லையே. 

பதில்: அந்த விடயம் குறித்து இது­வரை நாங்கள் பேச்சு நடத்­த­வில்லை. ஆனால் அவ­தா­னத்­துடன் இருக்­கிறோம். 


கேள்வி:
சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரன்   மற்றும் கஜேந்­திர குமார் பொன்­னம்­பலம் ஆகி­யோரின் கட்­சிகள் என்ன செய்யும் என்று கரு­து­கின்­றீர்கள்?

பதில்: கஜேந்­திரகுமார் பொன்­னம்­பலம்  தேர்­தலை புறக்­க­ணிப்பார் என்று நம்­பு­கின்றோம். 

கேள்வி:சி.வி. விக்­கி­னேஸ்­வ­ர­னுடன் பேச்சு நடத்­த­வுள்­ளீர்­களா? 

பதில்:நாங்கள் அனைத்து கட்­சி­க­ளு­டனும் பேச்சு நடத்­துவோம். 

கேள்வி:தமிழ்க் கூட்­ட­மைப்பின் ஆத­ரவை பெறு­வது தொடர்பில் அவர்­க­ளுடன் பேச்சு நடத்­து­வீர்­களா? 

பதில்:அது தொடர்­பான விடயம்  பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரி­ஸுக்கு பொறுப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அவர் அது  தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பார். 

கேள்வி:நீங்கள் பேச்­சு­வார்த்தை நடத்­து­வீர்­களா? 

பதில்:மத­வாத, இன­வாதம் இல்­லாத எந்த தரப்­பு­டனும் பேச்சு நடத்­துவோம். 

கேள்வி:அர­சியல் தீர்வு  தொடர்பில் உங்கள் தரப்பு அணு­கு­முறை என்ன? 

பதில்:மக்­க­ளுக்கு உயர்ந்­த­பட்ச அதி­கா­ரத்தை பகிர்­வதே எமது நிலைப்­பா­டாகும். அதற்­கான  நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்போம். 

கேள்வி: 13 ஐ மைய­மா­கக்­கொண்­டுதான் தீர்வு வருமா? 

பதில்: நான் அப்­படி கூற­வில்லை. மக்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை வழங்கும் செயற்­பாட்­டுக்கு செல்வோம். 

கேள்வி: உங்கள் தீர்­வுத்­திட்டம் என்ன என்­ ப­தனை மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர் ? 

பதில்:எம்­மிடம் அதற்­கான வேலைத்­திட்டம் உள்­ளது. அதனை நாம் முன்­னெ­டுப்போம். 

கேள்வி:ஒரு வரு­டத்தில் தீர்வை பெற்­றுத்­த­ரு­வ­தாக பிர­தமர் ரணில் தெரி­வித்­துள்­ளாரே? உங்­க­ளிடம் இவ்­வாறு  நேரம் அவ­காசம் இல்­லையா? 

பதில்:பிர­தமர் ரணில் ஐந்து வரு­டங்­க­ளாக என்ன செய்தார்?  ஒன்றும் செய்­ய­வில்லை.  இந்த விடயத்தில் ரணிலும் சுமந்­தி­ரனும் இணைந்து மக்­களை ஏமாற்­றி­யுள்­ளனர். 

கேள்வி: தமிழ் மக்கள் எதனை எதிர்­பார்க்­கின்­றனர் என்று உங்­க­ளுக்கு தெரி­யுமா? 

பதில்: நாங்கள் அது தொடர்பில் மதிப்­பீடு செய்­து­கொண்­டி­ருக்­கின்றோம். தமிழ் மக்­களின் தேவைகள் என்ன? அவர்கள் எதனை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்­றனர் போன்ற விட­யங்­க­ளைத்­தேடி   ஆராய்ந்து மதிப்­பீடு செய்­து­வ­ரு­கின்றோம். இது தொடர்பில் நாங்கள் தீர்­மானம் எடுக்­க­மாட்டோம். தமிழ் மக்­களே  தீர்­மானம் எடுக்­க­வேண்டும். அதுவும் ஒரு­வ­கை­யான அதி­கார பர­வ­லாக்கம் தானே? 

ஆனால் இங்கு  வடக்­கு–­கி­ழக்கு தமிழ் மக்­க­ளுக்கு ஒரு முக்­கிய விட­யத்தை கூற­வேண்டும். வடக்­கு–­கி­ழக்கு மக்கள் இம்­மு­றையும் ஏமாற்­ற­ம­டை­யக்­கூ­டாது. ஒரு­முறை எங்­க­ளுடன் கைகோ­ருங்கள். எமக்கு அதில் நம்­பிக்கை உள்­ளது. நீங்கள் அச்சம், சந்­தேகம் இன்றி வாழும் சூழலை உரு­வாக்­குவோம். 

வடக்­கு–­கி­ழக்கு மக்­களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தி  அபி­வி­ருத்­திகள் செய்­யப்­படும். அனை­வ­ரதும் சிவில் உரிமை பாது­காக்­கப்­படும். ஊழல் மோசடி அகற்­றப்­படும். கடந்த ஆட்­சிக்­கா­லங்­களில் நாங்கள் விட்ட குறை­பா­டுகள் நிவர்த்­திக்­கப்­படும்.

விசே­ட­மாக வடக்­கு–­கி­ழக்கு மக்­களின் பிரச்­சினை விட­யத்தில் அந்த மக்கள் பேச்சு நடத்த  முன்­வ­ர­வேண்டும். உங்கள் பிரச்­சினை உங்­க­ளுக்­குத்தான் தெரியும். நீங்கள் ஒரு பக்­கத்தில் மறைந்து இருக்­க­ வேண்டாம். நாங்கள் கரங்­களை நீட்­டி­யுள்ளோம். அவற்றை பற்­றிக்­கொள்­ளுங்கள். ஒரு கையினால்  கைதட்ட முடி­யாது. 

கேள்வி: கோத்­த­பாய ராஜபக் ஷவும் சுமந்­தி­ரனும் சந்­தித்து பேச்சு நடத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கின்­றதே? 

பதில்:சில காலத்­துக்கு முன்னர் பேச்சு நடத்­தி­யி­ருந்­தார்கள். 

கேள்வி: என்ன பேசப்­பட்­டது?

பதில்: அவர் சந்­திக்­க­வேண்டும் என்று கோரி­யி­ருந்தார். அதனால் சந்­திப்பு நடந்­துள்­ளது. 

கேள்வி: யார் சந்­திக்­க­வேண்டும் என்று கோரி­யது? 

பதில்: சுமந்­திரன் 

கேள்வி:ஏன் என்று தெரி­யுமா? 

பதில்: கோத்­த­பாய ராஜபக் ஷ  அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் திறந்த மன­துடன் பேச­வேண்டும் என்ற கொள்கை உள்­ளவர். அதனால் இந்த சந்­திப்பு நடை­பெற்­றது. 

கேள்வி:வடக்கு பகு­திக்கு நீங்கள் சென்று அந்த மக்­களின் தேவை என்ன என்­பது குறித்து  ஆராய்ந்து பார்ப்­பீர்­களா? 

பதில்: நான் நிச்­ச­ய­மாக செல்வேன். அத்­துடன் மஹிந்த ராஜபக் ஷ மற்றும்  எமது வேட்­பாளர் ஆகி­யோரும்  வடக்­குக்கு சென்று மக்­க­ளுடன் உரை­யா­டு­வார்கள். 

கேள்வி: உங்கள் தரப்பு வெற்­றி­பெற்றால் அடுத்த ஆட்­சியில் பஷில் ராஜபக் ஷவின் வகி­பாகம் என்ன?

பதில்: தற்­போது என்ன செய்­கின்­றேனோ அதனை செய்வேன். ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ரது பணி­க­ளுக்கு உத­வுவேன். 

கேள்வி:  பத­வி­களை பெற மாட்­டீர்­களா? 

பதில்: அதனை மக்­களே தீர்­மா­னிக்­க­வேண்டும். 

கேள்வி: உங்கள் வேட்­பாளர் மீது யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன. அதனை எவ்­வாறு கையாள்­வீர்கள்? 

பதில்: அது குறித்து மக்கள் தீர்­மானம் எடுப்­பார்கள். நாட்­டுக்கு இன்று என்ன தேவை என்­பதை மக்கள் தீர்­மா­னிப்­பார்கள். இன, மத வேறு­பா­டுகள் இன்றி அனைத்து மக்­க­ளுக்கும் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தக்­கூ­டி­யவர் யார் என்­ப­தனை  மக்கள் தீர்­மா­னிப்­பார்கள். சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அச்­ச­மின்றி வாழும் சூழல் உரு­வா­க­வேண்டும். மக்கள் மத்­தியில் உள்ள அச்­சத்தைப் போக்­கு­வது அவ­சி­ய­மாகும். 

கேள்வி : கோத்­த­பாய ராஜபக் ஷவின் அமெ­ரிக்க குடி­யு­ரிமை நீக்கம் குறித்த விட­யத்தில் குழப்­ப­நிலை நில­வு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றதே? உங்கள் பக்கம் சரி­யான பதில் வர­வில்­லையே? 

பதில்: அதில் பதில் வழங்க ஒன்­று­மில்லை. அது நீக்­கப்­பட்­டு­விட்­டது. 

கேள்வி : எனினும் அதில்  தெளி­வற்ற தன்மை உள்­ளதா? 

பதில்:  அவ்­வாறு ஒன்றும் இல்லை. அவர் அதனை கைவிட்­டு­விட்டார். அவ்­வ­ள­வுதான்.  தற்­போது உங்­க­ளுக்கு காணி ஒன்று உள்­ளது. அதனை நீங்கள் யாருக்­கா­வது கொடுத்­து­விட்­டீர்கள். தற்­போது உங­க­ளிடம் அந்த காணி இல்லை. அவ்­வ­ள­வுதான்.

கேள்வி : அப்­ப­டி­யா­யினும்  கச்­சே­ரிக்கு சென்று அதனை எழுதிக் கொடுக்­க­வேண்­டுமே? 

பதில்: அதனை அவர் எழு­திக்­கொ­டுத்­து­விட்டார். அவர் தானே எழு­துவார். அது தொடர்பில் எந்தப் பிரச்­சி­னையும் இல்லை. 

கேள்வி :  ஆளும் கட்சி வேட்­பாளர்? 

பதில்:    ஜனா­தி­பதி  தேர்­தலில் போட்­டி­யி­டப்­போகும்  நபர்  தொடர்பில் மக்­க­ளுக்கு சிறந்த தெளிவு இருக்­க­வேண்டும். அதற்கு 45 நாட்கள் போது­மா­ன­தல்ல. அமெ­ரிக்­காவில் ஒருவர் வேட்பாளராவதற்கு  இரண்டு வருடங்கள்  தேவையாகும். அதற்காக உழைக்கவேண்டும். இரண்டு வருடங்கள் பிரசாரம் செய்யப்படும். நிறைவேற்று அதிகாரத்துக்கு ஒருவரை நியமிக்கும்போது அவ்வாறுதான் இருக்கவேண்டும்.

நாங்கள் அதனை  கிரமமாக செய்து வருகின்றோம். நாங்கள் மறைத்து வைத்திருந்து வேட்பாளரை கொண்டுவரவில்லை. 

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் குறித்த சிறந்த தெளிவு  மக்களுக்கு இருக்கவேண்டும். ஆனால் அது இங்கே இல்லை. நாங்கள் எமது வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். அவரை வெற்றிபெற வைப்பதற்கான பிரசாரத்தை முன்னெடுப்போம். மக்களை நம்புகின்றோம். மக்களை நம்பி இந்த விடயத்தில் இறங்கியிருக்கின்றோம். மக்களின் ஆணையை எதிர்பார்க்கின்றோம். கிரிக்கட் விளையாட்டில் சில நேரம் பந்துவீச்சாளரின் பந்துவீசும் முறையில் மாற்றம் வரலாம். ஆனால் பந்துவீச்சாளர் மாறமாட்டார். 

கேள்வி : ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சியுடனான பேச்சுவார்த்தை எவ்வாறு உள்ளது? அவர்கள் உங்கள் தரப்பை ஆதரிப்பார்களா? 

பதில்: பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது. முடிவுகள் குறித்து தற்போது கூறமுடியாது.  நாம் ஏன் அதில் அவசரப்படவேண்டும். 

நேர்காணல் – ரொபட் அன்டனி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13