ஆப்கானிஸ்தானில் வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு - 16 பேர் காயம்

Published By: Daya

28 Sep, 2019 | 12:54 PM
image

ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் நிலையில் வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தற்போதைய ஜனாதிபதி அஷ்ரப் கானியின் பதவிக்காலம் முடிவடைந்த  நிலையில், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று காலை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கின்றனர்.

குறித்த தேர்தல் பிரச்சாரத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்றதால் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இதையும் மீறி பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

 இந்நிலையில், தலைநகர் காபூல் நகரில் உள்ள பகராம் மாவட்டத்தில் சம்சாத் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பயத்தில் அலறியடித்து ஓடினர்.

குறித்த  குண்டுவெடிப்பில் 16 பேர் காயமடைந்தனர், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் வாக்குப்பதிவு தாமதமானது. இந்த தாக்குலை தலிபான் பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து வாக்குச்சாவடிகளில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10