அணுவாயுத நாடுகள் மோதும்போது அதன் விளைவுகள் எல்லைக்கு அப்பால் வெகு தொலைவு வரை எதிரொலிக்கும் - யுத்தம் குறித்து இம்ரான்கான் ஐநாவில் மீண்டும் எச்சரிக்கை

Published By: Rajeeban

28 Sep, 2019 | 12:27 PM
image

காஸ்மீரில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக யுத்தமொன்று மூழக்கூடும் என பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் உரையாற்றுகையில் இம்ரான் கான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

காஸ்மீரில் தற்போது காணப்படும் நிலைமையை ஐநாவிற்கான ஒரு சவால் என வர்ணித்துள்ள இம்ரான்கான் இந்தியா பாக்கிஸ்தான் இடையிலான மோதலின் தாக்கம் எல்லைக்கு அப்பால் நெடுந்தூரம் வரை எதிரொலிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் நடவடிக்கைகள் காஸ்மீர் மக்களை தீவிரவாதமயப்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ள இம்ரான்கான் இந்தியாவின் நடவடிக்கைகளால் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் நடவடிக்கைகளிற்கு எதிர்வினை காணப்படும், பாக்கிஸ்தானை குற்றம்சாட்டுவார்கள், கடந்த பெப்ரவரி போல மீண்டும் இரு நாடுகளும் அணுவாயுத மோதலை நோக்கி செல்லக்கூடும் என பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மரபு வழி யுத்தம் ஆரம்பித்தால்  எதுவும் நடக்கலாம் என தெரிவித்துள்ள  இம்ரான்கான் தனது அயல்நாட்டை விட ஏழு மடங்கு சிறியதான நாட்டிற்கு இரண்டு தெரிவுகளே உள்ளன, ஒன்று சரணடைவது அல்லது இறுதிவரை போராடுவது நாங்கள் இறுதி வரை போராடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அணுவாயுத நாடுகள் இறுதிவரை மோதும்போது அதன் விளைவுகள் எல்லைக்கு அப்பால் வெகு தொலைவு வரை காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13