ஆபிரிக்காவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 30 பேர் பலி

Published By: Daya

28 Sep, 2019 | 11:59 AM
image

ஆபிரிக்காவில் தங்கச் சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆபிரிக்க - சாத் நாட்டின் மத்திய பகுதியில் லிபியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ளது டிபெஸ்டி பிராந்தியம். இங்குத் தங்கம் மிகுதியாகக் கிடைப்பதால் பல்வேறு குழுக்கள் சட்டவிரோதமாகச் சுரங்கம் அமைத்துத் தங்கத்தை எடுத்து வெளிச்சந்தைகளில் விற்றுவருகின்றனர்.

குறிப்பாக அண்டை நாடான சூடனைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகச் செல்ல எளிதில் பணம் பெறவும், கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராகப் போரிட ஆயுதங்களை வாங்கவும் டிபெஸ்டி பிராந்தியத்தில் சட்டவிரோத சுரங்க பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில், அங்குள்ள கொவ்ரி பவ்டி நகரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த தங்கச் சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கத்தை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகச் சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதில் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சென்ற மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும் 30 பேரைப் சடலமாக மீட்கமுடிந்தது. இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17