வெளிநாட்டவருக்கு வாக்களித்து மீண்டும் மோசடி  யுகத்துக்கு செல்ல மக்கள் விரும்ப மாட்டார்கள் : சம்பிக்க 

Published By: R. Kalaichelvan

28 Sep, 2019 | 10:20 AM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கில் மாத்திரமின்றி முழு நாட்டிலும் ஐக்கிய தேசிய கட்சி பாரியளவில் வெற்றி பெறும் எனத் தெரிவித்த பெருநகர் மற்றும் மேல் மாகாணா அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, வெளிநாட்டவருக்கு வாக்களித்து மீண்டும் மோசடி யுகத்துக்கு செல்ல மக்கள் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.

 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. அத்தோடு அவரே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று உறுதியாகக் கூற முடியும். காரணம் வெளிநாட்டு பிரஜையொருவருக்கு வாக்களித்து மீண்டும் ஊழல் மோசடி யுகத்திற்கு செல்வதற்கு மக்கள் விரும்ப மாட்டார்கள். 

எமது அரசாங்கத்தில் சில குறைபாடுகள் இருக்கின்றன. ஆனால் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்திய இந்த அரசாங்கம் நாட்டின் எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்துள்ளது. வடக்கு கிழக்கு மக்களும் எமக்கு ஆதரவளிப்பர் என்ற நம்பிக்கை இருக்கிறது. வடக்கு கிழக்கில் மாத்திரமின்றி நாம் முழுநாட்டிலும் பாரிய வெற்றி பெறுவோம். 

கேள்வி : நிபந்தனைகளின் அடிப்படையிலேயே சஜித் பிரேமதாச வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றதே ? 

பதில் : இல்லை. அவ்வாறு எந்த நிபந்தனையும் இல்லை. காரணம் நிபந்தனைக்கு உட்படுத்தி வேட்பாளரை நியமிக்கவும் முடியாது. இங்கு நிபந்தனைகள் அவசியமானவையல்ல. கொள்ளைகளே அவசியமாகும். அதே போன்று வேலைத்திட்டமும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக குழுவும் அத்தியாவசியமாகின்றன. 

அவ்வாறான கொள்கைகள், வேலைத்திட்டங்கள் மற்றும் குழுக்கள் என்பவற்றை எதிர்வரும் தினங்களில் கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி தீர்மானிப்போம். 

கேள்வி : இன்னும் சுமார் 50 நாட்கள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றன. அதற்கிடையில் இவை அனைத்தையும் செய்துவிட முடியுமா? 

பதில் : கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராகக் களமிறக்கிய போது எமக்கு 40 ஐ விடவும் குறைவான நாட்களே இருந்தன. எனினும் நாம் அவரை ஜனாதிபதியாக்கினோம். இம்முறையும் அவ்வாறே நடக்கும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53