கோத்தாபயவை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலையாகக் கோரி ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

28 Sep, 2019 | 09:42 AM
image

லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கோத்தாபய ராஜபக்சவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற வழக்கில் முன்னிலையாகி உண்மைத்தன்மையினை வெளிப்படுத்தக்கோரி நேற்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அக்கட்சியின் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டு 8 வருடங்கள் கடந்தநிலையில் அவர்களை வெளிப்படுத்துமாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாண நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

இது தொடர்பிலான மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு எழுத்தாணை மீதான ஆரம்ப விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவருகிறது.

இதில் முன்னிலையாகுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டபோதும் பாதுகாப்பினை காரணம்காட்டி அவர் முன்னிலையாகவிருக்க அவரது தரப்பால் மேன்முறையீட்டு நீதிமன்றில் இடைக்காலத் தடைக் கட்டளை பெறப்பட்டது.

எனவே கோத்தாபய ராஜபக்சவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற வழக்கில் முன்னிலையாகி உண்மைத்தன்மையினை வெளிப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11