பாடசாலையொன்றில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த 300 பேர் மீட்பு- நைஜீரியாவில் சம்பவம்

Published By: Rajeeban

28 Sep, 2019 | 12:09 AM
image

நைஜீரிய காவல்துறையினர் பாடசாலையொன்றில்  மிகமோசமான விதத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் உட்பட 300 பேரை மீட்டுள்ளனர்.

நைஜீரியாவின் கடுனா நகரில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட பாடசாலையின் உரிமையாளர் தான் இஸ்லாமிய சீர்திருத்த பள்;ளியை நடத்துவதாக தெரிவித்துள்ள போதிலும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள் உட்பட பலர் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து குறிப்பிட்ட பாடசாலைக்கு சென்ற காவல்துறையினர் 13 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் உட்பட பல சிறுவர்களையும் இளைஞர்களையும் மீட்டுள்ளனர்.

சிலர் மிக குறுகிய இடத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடைக்கப்பட்டிருந்தனர்,என தெரிவித்துள்ள காவல்துறையினர் அவர்கள் மூர்க்கத்தனமானவர்களாக காணப்படவில்லை இதன் காரணமாக அவர்களை அவ்வாறு அடைத்துவைப்பதற்கான அவசியம் இல்லை என  தெரிவித்துள்ளனர்.

சில சிறுவர்களின் முதுகில் காயங்கள் காணப்பட்டன அவர்கள் தாங்கள் பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் உடலில் தழும்புகளும் சித்திரவதைக்கான அடையாளங்களும் காணப்பட்டன அவர்கள் தங்களை அங்கிருந்து அகற்றுமாறு மன்றாடினர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நைஜீரியாவின் அயல்நாடுகளை சேர்ந்த சிறுவர்களும் காணப்பட்டதாகவும் இது தொடர்பில் அதிபரையும் ஆறு ஆசிரியர்களையும் கைதுசெய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52