எல்பிடிய பிரதேச சபை தேர்தல்  சஜித் பிரேமதாஸவிற்கு பலப்பரீட்சை :  பொதுஜன பெரமுன உள்ளுராட்சிமன்ற சம்மேளனம்

Published By: R. Kalaichelvan

27 Sep, 2019 | 03:47 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 ஜனாதிபதி தேர்தலை எதிர்க் கொள்வதற்கு முன்னர்  ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ எல்பிடிய பிரதேச சபை தேர்தலை வெற்றிக் கொள்ள வேண்டும்.

 எல்பிடிய பிரேதசபை தேர்தல் சஜித் பிரேமதாஸவிற்கு பலப் பரீட்சை என பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற சபை சம்மேளன சபை தலைவர் உதயன அதுகோரல தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில்  இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 ஐக்கிய தேசிய கட்சி பாரிய போராட்டத்தில் மத்தியில் தற்போது தனது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய  ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் ஒரு தரமான போட்டி காணப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது பொது ஜன பெரமுன வெற்றிப் பெறுவதற்கான சூழலே காணப்படுகின்றது .

 எமது வெற்றிக்கு  ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஒரு சவால் அல்ல. நல்லாட்சி அரசாங்கத்தில் இடம் பெற்ற அனைத்து மோசடிகளில் இருந்தும்  அவர் ஒருபோதும் விடுபட முடியாது. 

ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற நிர்வாகத்தினால் இன்று நாட்டு மக்கள் பாரிய அசௌகரியங்களையே எதிர்க் கொண்டுள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31