சுகவீன போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது - ஆசிரிய தொழிற் சங்கங்கள் 

Published By: R. Kalaichelvan

27 Sep, 2019 | 03:39 PM
image

(இரா.செல்வராஜா)

ஆசிரியர்களின் இரண்டுநாள் சுகவீன விடுமுறை போராட்டம் எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக நடைப் பெற்றதாக ஆசிரிய தொழிற் சங்ககங்கள் தெரிவித்தன.

இந்த போராட்டத்தின் காரணமாக பாடசாலைகளின் கற்பித்தல் நடவடிக்கைகள் முற்று முழுதாக பாதிக்கப்பட்டதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

நேற்றய திமான வியாழன் , இன்று வெள்ளி கிழமை ஆகிய இரு தினங்களிலும் ஆசிரியர்கள் , அதிபர்கள் ஆகியோர் இணைந்து வடக்கு கிழக்கு உட்பட நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும்  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். இதனால் கற்பித்தல் நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. மாணவர்களின் வரவிலும் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது. 

30 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் இணைந்து நேற்று மேற்கொண்ட ஆர்பாட்டத்தின் காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி மூடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஆசிரியர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படாத பட்சத்தில் அடுத்த மாதம் 7 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை வேலை நிறுத்தம் செய்யபோவதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58