“இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்துவோம்..!” - இலங்கை மீனவர்கள் உறுதி

Published By: Digital Desk 3

27 Sep, 2019 | 02:19 PM
image

“இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவித்து, சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்க வேண்டுமென எங்கள் நாட்டு அரசிடம் வலியுறுத்துவோம்” என்று, இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் முகமது ராஜிஸ் (32), வசீகரன் (20), முகமது ரிகாஸ் (23) ஆகியோர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேதாரண்யம் கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இந்திய கடலோர காவல் படையினர், 3 பேரையும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்தனர்.

பின்னர் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இந்தியாவில் சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இவர்களின் தண்டனை காலம் முடிந்தும், கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கியாமான ஆவணங்கள் இல்லாததால், இலங்கைக்கு திரும்ப முடியாமல் தொடர்ந்து சிறையிலேயே இருந்தனர்.

இந்நிலையில், இவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளில் சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு செயலாளர் ஜெயந்தி ஈடுபட்டார். இதையடுத்து, சென்னையில் உள்ள இலங்கை தூதரக உதவியுடன் 3 பேருக்கான கடவுச்சீட்டு ஆவணங்கள் தயார் செய்யப்பட்டன.

இதையடுத்து நேற்று (26.09.2019) பகல் 12 மணியளவில் மீனவர்கள் 3 பேரும், சென்னையில் இருந்து இலங்கை செல்லும் இண்டிகோ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் 3 மீனவர்களும் நிருபர்களிடம் கூறியதாவது; “நாங்கள் கடந்த 3 மாதத்துக்கு முன்பு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது வழிதவறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டோம்.

இந்நிலையில், எங்களை இந்திய சட்டப்பணிகள் ஆணையகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் ஜெயந்தி சிறையில் சந்தித்து, எங்களை பற்றிய விவரங்களை கேட்டறிந்தார்.

அதன் பிறகு, நாங்கள் இலங்கைக்கு திரும்புவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். இப்போது நாங்கள் இலங்கை தூதரக அதிகாரிகளின் உதவியுடன் நாடு திரும்புகிறோம்.

இந்திய மீனவர்கள் சிலர் எங்கள் நாட்டு சிறையில் இருக்கின்றனர். அவர்களின் மனதும் எங்களை போன்றுதான் வேதனைப்படும் என்பதை உணர்ந்து கொண்டோம்.

நாங்கள் எங்கள் நாட்டிற்கு சென்றதும், எங்கள் நாட்டு அரசிடமும், அதிகாரிகளிடமும், ‘இந்திய மீனவர்களை, குறிப்பாக தமிழக மீனவர்களை சிறையில் இருந்து விடுவித்து அவர்கள் நாட்டிற்கு விரைவில் அனுப்பி வையுங்கள்’ என்று வலியுறுத்துவோம்” என்று கூறியுள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02