4WD-50HP ட்ராக்டர்களை சொனாலிகாவுடன் இணைந்து நவலோக ஹோல்டிங்ஸ் அறிமுகம்

Published By: Priyatharshan

18 May, 2016 | 01:03 PM
image

நவலோக ஹோல்டிங்ஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான நவலோக அக்ரி (பிரைவட்) லிமிட்டெட், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்ட விவசாய தீர்வுகளை வழங்குவதன் மூலம் விவசாயத்துறையின் உற்பத்தித் திறனை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது.

மேலும், இந்தியாவின் சொனாலிகா ட்ராக்டர்ஸ் தொழிற்சாலைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த அங்கீகாரம் பெற்ற விநியோகத்தர்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் பிரகாரம், தொழில்நுட்பரீதியில் சிறந்த ட்ராக்டர்களை விற்பனை செய்ய தீர்மானித்தது.

மேலும், விவசாயிகளுக்கு வெவ்வேறு நிலங்களில் மண் தன்மைகளுக்கு உகந்த வகையிலான ட்ராக்டர் தேவைப்படுகிறது. அத்துடன் அதிகளவு சக்தி வாய்ந்த தீர்வுகள் குறைந்த எடையை கொண்டதாக அமைந்திருப்பது பற்றிகவனம் செலுத்துகிறது.

 குறைந்த விலையில் தரமான தீர்வுகளை எதிர்பார்ப்பவர்களாக அவர்கள் அமைந்துள்ளனர்.

இந்த தேவைகளை நன்குணர்ந்து, நவலோக அக்ரி, 4WD திறன் வாய்ந்த 50 குதிரை வலு கொண்ட (hp) ட்ராக்டர் விவசாய சமூகத்தில் புதிய அறிமுகமாக அமைந்துள்ளது.

புதிய சொனாலிகா 4WD ட்ராக்டர் என்பது அண்மையில் வெல்லவாயவில் நிறைவடைந்த தொழிற்துறை கண்காட்சி மற்றும் நுகர்வோர் விற்பனை சந்தை 2016 இல் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

நவலோக அக்ரி முகாமைத்துவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சொனாலிகா விற்பனை முகாமையாளர் மற்றும் பிராந்திய விற்பனை பிரதிநிதி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

வெல்லவாய பகுதியில் அமைந்துள்ள நவலோக அக்ரி காட்சியறையில் புதிய சொனாலிகா 4WD  ட்ராக்டர்களை பார்வையிட முடியும். பொலன்நறுவை, பரந்தன் மற்றும் வெல்லவாய ஆகிய ஏனைய பகுதிகளில் விரைவில் இந்த ட்ராக்டர்கள் விரைவில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன.

விவசாயிகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், கந்தளாய், குருநாகல்,  கலென்பிந்துனுவெவ மற்றும் பொலன்நறுவை ஆகிய பகுதிகளிலும் இந்த ட்ராக்டர் வகை விற்பனை செய்யப்படவுள்ளன.

நவலோக ஹோல்டிங்ஸ் மற்றும் நவலோக அக்ரி ஆகியவற்றின் தலைவர் ஜயந்த தர்மதாச கருத்து தெரிவிக்கையில்,

“நவீன சொனாலிகா ரக ட்ராக்டர்களை இலங்கையின் விவசாய சமூகத்துக்கு அறிமுகம் செய்வதையிட்டு மிகவும் பெருமையடைகிறோம். இந்த முதலாவது 4WD 50ரி ட்ராக்டர் என்பது வெவ்வேறு விவசாய செயற்பாடுகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. 4WD பிரிவில் காணப்படும் மிகச் சிறந்த தெரிவாக இது அமைந்துள்ளது என நாம் நம்புகிறோம்” என்றார்.

சொனாலிகா ட்ராக்டர்கள் நிர்மாணத்துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் சிறந்தன. இந்த செயற்பாடுகளுக்கான ட்ராக்டர்கள் உயர்ந்த குதிரை வலுக்களான 76, 90 மற்றும் 120 போன்றவற்றை கொண்டுள்ளன.

50 குதிரை வலுவைக் கொண்ட 4WD ட்ராக்டர் உயர் எரிபொருள் சிக்கனத்தை வழங்கக்கூடியது, பராமரித்தல் இலகுவானது, நவலோக நிறுவனத்தின் மூன்று ஊழியர் சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58