கோத்தாபயவுடன் விவாதம் நடத்த தயார் - அனுரகுமார

Published By: Vishnu

27 Sep, 2019 | 09:40 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

எவன்கார்ட் நிறுவனம் தொடர்பாக கோத்தாபய ராஜக்ஷவுடன் நேரடியாக விவாதிக்க தயாராக இருக்கின்றேன் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்சியொன்றில் கலந்துகொண்டு எவன்கார்ட் நிறுவனம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கடல் பாதுகாப்புச்சேவை ரத்னா லங்கா நிறுவனம் ஊடாக எமது கடற்படை மேற்கொண்ட சேவை அரசாங்கத்துக்கு மிகப்பாரிய வருமானத்தை பெற்றுக்கொடுத்ததொன்றாகும். இவ்வாறு கடற்படை மூலம் பாரிய வருமானத்தை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுத்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் எந்த காரணமும் இன்றி அன்றைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போத்தாபய ராஜபக்ஷ் அந்த சேவையை எவன்கார்ட்  நிறுவனத்துக்கு வழங்கி இருந்தது.

இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பின்னர் பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக நான் கேள்வியெழுப்பிய தைத்தொடர்ந்து மீண்டும் குறித்த சேவை கடற்படைக்கு கீழ் கொண்டுவரப்பட்டது. அத்துடன் கடற்படைக்கு கீழ்கொண்டுவரப்பட்ட பின்னர் எவன்கார்ட் ஊடாக கடற்படை 8 பில்லியன் ரூபா வருமானம்பெற்றுக்கொண்டதாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடற்படை அறிவித்திருந்தது.

எனவே அரசாங்கத்துக்கு பூரண வருமானம் வந்துகொண்டிருந்த நிறுவனத்தை கோத்தாபய தனக்கு தேவையான வியாபாரி ஒருவருக்கு வழங்கினார். அதுமாத்திரமின்றி அந்த நிறுவனத்துக்கு தரை, ராணுவ பயிற்சி வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வேறு எந்த தனியார் நிறுவனத்துக்கும் இவ்வாறு ராணுவ பயிற்சி வழங்க அனுமதி வழங்கியதில்லை. 

அதேபோன்று எவன்காட் நிறுவனத்துக்கு கீழ் எந்தளவு ஆயுதம் இருந்தது என்றும் எந்தளவு ஆயுதங்கள் வெளியில் சென்றது என்றும் அறிக்கை இருக்கவில்லை. அதனால் அரசாங்கத்துக்கு பூரண வருமானத்தை பெற்றுக்கொடுத்துக்கொண்டிருந்த நிறுவனத்தை எந்த காரணத்துக்காக தனியார் வியாபாரி ஒருவருக்கு வழங்கினார் என்ற சந்தேகம் இன்றும் எனக்கிருக்கின்றது. இதுதொடர்பாக கோத்தாபய ராஜபக்ஷ்வுடன் நேரடி விவாத்துக்கும் நான் தயாராக இருக்கின்றேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43