இந்து கோயில் என்ன சவக்காலையா ? - காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் 

Published By: Digital Desk 4

26 Sep, 2019 | 10:03 PM
image

பிக்குவின் உடலை தகனம் செய்வதற்கு இந்துக்கோயில் என்ன சவக்காலையா? என வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் உறவுகளின் சங்கத்தினர் கேள்வி எழுப்பினர்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்,

அரச மரம் இருக்கின்ற இடமெல்லாம் புத்தர் சிலையை அமைத்து விட்டு தமது இடம் என்று சொல்கிறார்கள். இதேபோன்று நாமும்  தென்பகுதிக்கு சென்று ஒரு இந்து கோவிலை அமைத்து விட்டு எமது பூர்விக இடமென்றால் அதனை அரசாங்கமோ, பௌத்தர்களோ ஏற்று கொள்வார்களா? என்பதை அவர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்வதற்கு இந்துக்கோயில் என்ன சவக்காலையா?, அப்படியானால் தமிழர்கள்  இந்த நாட்டு மக்களில்லையா? பௌத்தர்கள் மாத்திரமா இங்கு வாழலாம் என்பது கேள்வியாக இருக்கிறது.

யாரானாலும் நீதி என்பது அனைவருக்கும் சமனானது. ஆனால் இங்கு சட்டவாளருக்கே தாக்குதல் மேற்கொள்ளப்படும் அவல நிலை உருவாக்கபட்டிருக்கிறது. எனவே நீராவியடி சம்பவத்தில்  சட்டத்தையும், நீதித்துறையையும் அவமதித்த தேரர்களுக்கு தண்டனை வழங்கபட வேண்டும். தமிழர்களாகிய நாம் ஒன்று பட்டு எமக்கான உரிமையை வென்றெடுக்க வேண்டும்.

இதேவேளை நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவிருக்கின்ற நிலையில் எம்மை பொறுத்தவரை புதிதாக எந்த ஒரு ஜனாபதி வந்தாலும் காணாமல் ஆக்கபட்டவர்கள் இல்லை என்றே பதில் கூறுவார்கள். அதுவே யதார்த்தம். எனவே நாம் யாரையும் ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இல்லை. எனினும் எமது பிள்ளைகளின் நிலையை அறியும் வரை நாம் தொடர்ந்து போராடி கொண்டேயிருப்போம். 

அந்தவகையில் எதிர்வரும் மாதம் 1 ஆம் திகதி சர்வதேச சிறுவர்தினம் அனுஸ்டிக்கபடவுள்ள நிலையில், அன்றையநாள் வடகிழக்கின் 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்வதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

குறித்த போராட்டம் வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 9 மணிக்கு இடம்பெறும்.எமது போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவை நல்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56