ஐ.தே.க.வின் அடுத்த வியூகம் இதுதான் - அகிலவிராஜ்

Published By: Vishnu

26 Sep, 2019 | 07:41 PM
image

(ஆர்.யசி, நா.தினுஷா)

ஐக்கிய தேசிய கட்சியினர் கட்சியின் மாநாட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதியும் தமது மக்கள் பலத்தை நிரூபிக்கும் கூட்டத்தை 10 ஆம் திகதியும் நடத்தவுள்ளதாக கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பட்டத்தன் பின்னர் சிறிகொத்தாவில் இடம்பெற்ற விசேட ஊடவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவற்றை கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தீர்மானம் எடுக்க ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுவும்  பிரதமர் தலைமையில் கூடி இணக்கம் கண்டது. 

இதன்போது தேர்தல் முறைமையில் மாற்றங்களை கொண்டுவருவது மற்றும் பிரதமரின் இணக்கப்பாட்டுக்கு அமைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழித்தல் உள்ளிட்ட எமது அரசாங்கம் இணக்கம் தெரிவித்த அரசியல் அமைப்பு முறைமையை உருவாக்குவதால் முதல்கொண்டு அனைத்தையும் நிறைவேற்றுவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இவை தெரிவுக்குழுவிழும் பாராளுமன்ற குழுவிலும் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. 

அத்துடன் பிரதமர் மற்றும் கட்சியின் தலைமைப்பதவி ரணில் விக்கிரமசிங்கவிடம் தொடர்ந்தும் இருக்கும். இதற்கும் அனைவரும் இணைக்கம் தெரிவித்தனர். எமது ஜனாதிபதி -எமது பிரதமரின் தலைமையில் ஆட்சியை உருவாக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். 

அத்துடன் நாம் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியாக இணைந்து பரந்த கூட்டணியாக தேர்தலில் களமிறங்கவுள்ளோம். இதுவரை எம்முடன் இணையாத கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பரந்த கூட்டணியாக வெற்றியை பெற்றுக்கொள்ளவே தீர்மானம் எடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15