UPDATE : ஆசிரியர்களின் போராட்டத்தினால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாதிப்பு 

Published By: R. Kalaichelvan

26 Sep, 2019 | 06:43 PM
image

(இரா.செல்வராஜ் , ஆர்.விதுஷா)

அதிபர்களினதும் ஆசிரியர்களினதும் தொழில் சங்கங்கள் இணைந்து  நாடளாவிய  ரீதியில் மேற்கொண்ட இருநாள் சுகயீன விடுமுறை  போராட்டத்தின் காரணமாக அனைத்து பாடசாலைகளினதும், கற்பித்தல்  நடவடிக்கைகள்  பாதிக்கப்பட்டன.  

இன்றய தினம் நாட்டிலுள்ள  அனைத்து பாடசாலைகளினதும் ஆசிரியர்களின் வரவு மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தன. மாணவர்களின்  வரவில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.  

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட  ஆசிரியர்  மற்றும் அதிபர்கள்  இன்று காலை கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் பாரிய எதிர்ப்பு  ஆர்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஆசிரியர் சேவை  சங்கம் , கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை ஜனநாயக ஆசிரியர்  சங்கம் , இலங்கை தேசிய அதிபர் சங்கம் உள்ளடங்கலாக முப்பது  சங்கங்களின்  உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் பேரணியாக  ஜனாதிபதி  செயலகத்தை  நோக்கி  கோஷங்களை  எழுப்பியவாறு சென்றனர். இதனை  அடுத்து கொழும்பு கோட்டை லோட்டஸ்  சுற்றுவட்டப்பாதை  மூடப்பட்டது.லோட்டஸ் சுற்று வட்டத்தில்  பெரும்  எண்ணிக்கையான  பொலிசார்  பாதுகாப்பு  கடமையில்  ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.  

பேரணியாக சென்ற அனைவரும் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல முற்பட்ட போதும் அதனை தடுத்த பொலிசார் அவர்களில் 12  பிரதிநிதிகளை மாத்திரமே  ஜனாதிபதி  செயலகத்திற்கு செல்ல  அனுமதித்தனர். 

ஜனாதிபதி செயலாளரை சந்திக்க  சென்ற போதிலும் அவரை சந்திக்க முடியாது போனதாகவும் ,ஆனால்  ஜனாதிபதி செயலாளரின்  உதவியாளரை  மட்டுமே சந்திக்க முடிந்தது. 

இச்சந்திப்பு எமக்கு எந்த விதத்திலும் திருப்தி அளிக்கவில்லை என அகில இலங்கை ஆசிரிய சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். 

இன்றைய சுகவீன விடுமுறை போராட்டத்தில் 98 வீத ஆசிரியர்கள் கடமைக்கு  சமூகமளித்திருக்கவில்லை. இது  எமக்கு  கிடைத்த  மாபெரும்  வெற்றியாகும். ஏனெனில்  வடக்கு  - கிழக்கு  மாகாணம் உட்பட  அனைத்து  பாடசாலைகளினதும் அதிபர்களும்  ஆசிரியர்களும்  இந்த  போராட்டத்திற்கு  தமது ஒத்துழைப்பை  வழங்கினர். 

அவ்வாறாக  நாளை தொடரவுள்ள  சுகவீன  விடுமுறைப்போராட்டத்திற்கும் அனைத்து அதிபர், ஆசிரியர்களும்   ஆதரவை  வழங்கி  இந்த  எதிர்ப்பு  நடவடிக்கையை மேலும்   பலம்  பொருந்தியதாக  மாற்றுவார்கள்  என   எதிர்பார்க்கின்றோம். 

சம்பள  முரண்பாடு, படிவங்கள்  நிரப்புதல் ,அரசியல்  பழிவாங்கல்  உட்பட ஆறு கோரிக்கைகளுக்கு குறித்த காலத்திற்குள் தீர்வு  வழங்கப்படாத  பட்சத்தில்  எதிர்வரும்  ஒக்டோபர்  மாதம்  7ஆம்  திகதி முதல் 12  ஆம்  திகதி வரை வேலை  நிறுத்தத்தை  மேற்கொள்வதனை  தடுக்க முடியாதாகிவிடும் எவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33