உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

Published By: Digital Desk 4

26 Sep, 2019 | 04:51 PM
image

நல்லூர்

தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தலில் 12ஆம் நாளான இறுதிநாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

நல்லூர் வீதியில் திலீபன் உணவு ஒறுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இடத்தில் அவர் வீரச்சாவடைந்த நேரமான முற்பகல் 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து நல்லூர் பின் வீதியில் பருத்தித்துறை வீதியில் தற்போது இடித்தழிக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

யாழ்ப்பாண மாநகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சி பேதங்களின்றி அனைவரும் ஒன்றிணைந்து நடத்தினர்.

தொடர்ந்து நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி  உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பெருமளவான மக்கள் பங்கேற்று தீபம் ஏற்றி நினைவேந்தலைக் கடைப்பிடித்தனர்.

கிளிநொச்சி

தியாகதீபம் திலீபனின் 32 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக குறித்த நிகழ்வு காலை 9 மணிக்கு ஆரம்பமானது. 

இந்நிகழ்வில் திலீபனின் திருவுருவ படத்திற்கான ஈகைச்சுடரினை பா.ம உறுப்பினர் சி.சிவஞானம் ஏற்றிவைக்க மேனாள் வ.மா.சபை கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் வ.மா.சபை மேனாள் உறுப்பினர் ச.பசுபதிப்பிள்ளை ஆகியோர் மாலை அணிவித்தனர். 

தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெற்று அங்சலி செலுத்தப்பட்டதுடன், அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.

மன்னார்

தியாக தீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 10.48 மணியளவில்  மன்னாரில் இடம்பெற்றது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டின்,அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வின்  போது  தியாக தீபம் திலீபனின் படத்துக்கு  பொதுச்சுடர் மற்றும்  மலர் மாலை அணிவிக்கப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அங்கு வந்திருந்தவர்களும்  திலீபனின் நினைவு படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மதத்தலைவர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் உயிரிழந்த போராளிகளின் உறவுகள்,  என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகளை நிறைவேறவும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த சனிக்கிழமை வவுனியாவில் ஆரம்பமான நடைபயணம் இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூரை வந்தடைந்தது. 

குறித்த நடைபயணம் நேற்றைய தினம் யாழ்.நாவற்குழி சந்தியை வந்தடைந்த நிலையில் இன்றைய தினம் காலை நாவற்குழி சந்தியில் இருந்து நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தை நோக்கி வந்ததடைந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56